ஸ்ரீ
வாழ்க வளமுடன்
அனைவருக்கும் வணக்கம்…
¾ என் நினைவு தெரிந்து என்னுடைய பிறந்த தினத்தை எப்போதுமே என் அப்பா அவர் உயிரோடு இருந்தவரை சிறப்பாக கொண்டாடியதை பார்த்து இருக்கின்றேன்.
¾ சற்று வயதில் வளர்ந்த பின் நானும் தனியாக நண்பர்களுடன் என்னுடைய பிறந்த தினத்தை கொண்டாடி இருக்கின்றேன்.
¾ திருமணத்திற்கு பிறகு குடும்பத்தினருடனும் என்னுடைய பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடி இருக்கின்றேன்.
மொத்தத்தில் குடியோடு பாதி பிறந்தநாட்களையும், குடும்பத்துடன் மீதம் பிறந்தநாட்களையும் கொண்டாடிய நான், ஏதோ ஒரு உந்துதல் காரணமாக இனிமேல் அப்படி கொண்டாடுவதில்லை என்று முடிவெடுத்து, அதன் காரணமாக ஆண்டாளுக்கு தொண்டு செய்த 30 நண்பர்கள் சூழ ஆண்டாளுடனும், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள செண்பகத்தோப்பு காட்டழகருடனும் கொண்டாட முடிவெடுத்து அப்படியே கொண்டாடி மகிழ்ந்தோம்.
மிக அற்புதமான தருணம் என வந்த அனைவரும் உணர்ந்து, தெளிந்து, கலைந்தார்கள்.
வாழ்க்கையில் நிறைய விஷயங்களை தவறான வழியில் சென்று தொலைத்து விட்டேன் என்பதை நான் உணர்ந்து கொண்ட நாள் February 28th 2015.
நான் கூப்பிட்டேன் என்பதற்காக 4 கி.மீ + 4 கி.மீ மலை ஏறி இறங்குவதை சிரமமாக கருதாமல் வந்து சிறப்பித்து சென்ற காலில் ஊனம் இருந்தாலும் மனதில் வைராக்கியம் உள்ள திருவாரூர் திரு.செல்வகுமார், திருவாரூர் திருமதி.ஷோபாவின் 4 வயது குழந்தை ராகவர்ஷினி, திருப்பூர் திரு.பூபதியின் 5 வயது குழந்தை ஷிவானி என்று மலை ஏறியவர்கள் ஒரு புறம் என்றால், 25 – 30 வயது கொண்ட திருமணம் ஆகாத இளைஞர்கள் சிறிய இந்த மலை ஏறுவதையே இமயமலை ஏறுவது போல் கஷ்டப்பட்டு, சிரமப்பட்டு ஏறியதையும் மற்றொரு பக்கம் பார்க்க முடிந்தது.
பள்ளத்தில் வீழ்ந்த யானையை இன்னொரு யானை தான் தூக்க முடியும் என்பார்கள் அதுபோல கடவுள் கொடுத்த பிரச்சினைகளை கடவுள் தானே தீர்க்க முடியும்.
போய் வந்த பிறகு மாபெரும் இந்த உண்மையை உணர்ந்து கொண்டேன். உணர்ந்த உண்மையை ஒரு நாள் உங்களுடன் நிச்சயம் பகிர்ந்து கொள்வேன்.
அதற்கு முன் பரவசம் என்கின்ற வார்த்தையின் அர்த்தத்தை கண்டுபிடிக்க, நீங்களும் ஒரு சனிக்கிழமை சென்று பாருங்களேன்…
வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!