பிடாரி செல்லாண்டியம்மன்:
செல்லாண்டியம்மன் தமிழகத்தின் முக்கிய தெய்வங்களில் ஒன்று.
குறிப்பாக கொங்கு நாட்டில் செல்லாண்டியம்மன் வழிபாடு பிரபலம். நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களில் செல்லாண்டியமன்னுக்கு பல கோவில்கள் உள்ளன.
செல்லாண்டியம்மனை செல்லியாயி, செல்லியம்மன், செல்லாத்தா என்ற பெயர்களிலும் அழைக்கின்றனர்.
இக்கோயிலில் திருவிழாவின் போது தூக்குதேர் தூக்கப்படுகிறது.
பிடாரி செல்லாண்டியம்மன் கோவில் #ஒருவந்தூர் எனும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோவிலாகும். மூலவராக பிடாரி செல்லாண்டியம்மனும் பரிவாரத் தெய்வங்களாக கருப்புசாமி கன்னிமார், இசக்கி போன்றோரும் இக்கோவிலில் உள்ளனர்.
மூலவர் : பிடாரி செல்லாண்டியம்மன்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் : ஒருவந்தூர்
மாவட்டம் : நாமக்கல்
மாநிலம் : தமிழ்நாடு
தல #வரலாறு :
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த ஊர் மற்றும் இதன் சுற்றுப்பகுதி உப்பு மண் நிலமாக இருந்தது. ஒருமுறை அங்கு வசிக்கும் ஊர் மக்கள் அந்த உப்பு மண்ணை வெட்டி எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவரது மண்வெட்டி ஒரு பொருளின் மீது சத்தத்துடன் மோதியது.
பின் அந்த இடத்திலிருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. பயத்துடன் தோண்டி பார்த்த போது அங்கே அழகு மிளிர ஒரு அற்புத அம்மன் விக்ரகம் வெளிப்பட்டது.
எந்த தவமும் செய்யாமல் தங்களை தேடி வந்த அம்மனை கண்டு மெய் சிலிர்த்து நின்றனர் அந்த சுற்றுப்புற மக்கள். பின் அம்பாளுக்கு பச்சை பந்தல் போட்டு பூஜை செய்தனர்.
இவ்விடத்திலேயே ‘பிடாரி செல்லாண்டி” என்ற திருநாமம் கொண்டு நிரந்தரமாக தங்கி விட்டாள் அம்பிகை. காலப்போக்கில் அம்பிகையின் அருளாலும் பக்தர்களின் முயற்சியாலும் இப்போதுள்ள கோவில் உருவானது.
தல #பெருமை :
இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
சிவனுக்கு ரிஷபமே வாகனம். ஆனால் இங்கு குதிரை வாகனமாக சுவாமி வந்துள்ளது விசேஷ அம்சம்.
சிவனும் பார்வதியும் இணைந்த சக்தியின் ரூபமே செல்லாண்டியம்மன் ஆகும். செல்லாண்டியம்மன் வடக்கு நோக்கி நாமக்கல் மற்றும் மோகனூர் பகுதியை பார்த்திருப்பதால் இவ்வூர்கள் பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது என்பது மக்களின் நம்பிக்கை.
சில ஆண்டுகளுக்கு முன் திருப்பணிக்காக கோவிலை தோண்டும் போது ஒரு நீண்ட கல் தென்பட்டது.
அதில் ஒரு குதிரையும் ஒரு மரமும் அதன் கீழ் உள்ள லிங்கத்தை பார்வதி தேவி பூஜை செய்வது போலவும் செதுக்கப்பட்டிருந்தது.
பார்வதி பூஜை செய்து வரம் பெற்றதை போன்று வடிக்கப்பட்டிருப்பதால் பெண்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற இந்த சிலையை வணங்கி பயனடைகிறார்கள்.
மாசிமகத்தை ஒட்டி தேரோட்டம் உள்பட 15 நாள் திருவிழாவும் மார்கழியில் வேல்திருவிழாவும் நடைபெறும்.
தமிழ்நாட்டில் செல்லாண்டியம்மன் கோவில்கள் :
செல்லாண்டியம்மன் கோவில், மதுக்கரை, மாயனூர், கரூர் (மூலக் கோவில்)
அணைக் கருப்பண்ணசாமி, செல்லாண்டியம்மன் கோவில், மலைக் கோவிலூர் (அமராவதி அணைக்கருகில்),கரூர்,செல்லத்தம்
மதுரை,செல்லாண்டி அம்மன் கோவில், மல்லசமுத்திரம்(அஞ்சல்),திருச்
செல்லாண்டியம்மன் கோவில், அரியப்பம்பாளையம் ,சத்தியமங்கலம்.
செல்லாண்டியம்மன் கோவில், கீழ்சாத்தம்பூர், நாமக்கல்
செல்லாண்டியம்மன் கோவில், பாண்டமங்கலம், உறையூர், திருச்சி
செல்லாண்டியம்மன் கோவில், பெருந்துறை,
செல்லாண்டியம்மன் கோவில், பொன் ஆரியூர் அரவக்குறிச்சி வட்டம், க.பரமத்தி
செல்லாண்டியம்மன் கோவில், மேட்டுமருதூர், குளித்தலை
செல்லாண்டியம்மன் கோவில், வெள்ளக்கோவில்
செல்லாண்டியம்மன் திருக்கோயில் சுண்டக்காமுத்தூர் கோயம்புத்தூர் மாவட்டம்.
செல்லாண்டியம்மன் திருக்கோயில், சிங்காநல்லூர், கோயம்புத்தூர்
பிடாரி செல்லாண்டியம்மன் திருக்கோயில்,ஒருவந்தூர்,
மோகனூர், நாமக்கல் மாவட்டம்.
வனவாசி செல்லாண்டியம்மன் திருக்கோவில், வனவாசி, சேலம்.