பிச்சைக்காரன்:
முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதி
அவர்களின் உடல் தகனம் சென்னையில்
நடைபெற்ற அன்று நான் ஸ்ரீவில்லிபுத்தூரில்
நான்காம் நாள் விழாவிற்காக சென்றிருந்தேன்.
ஆண்டாளை எப்போது பார்த்தாலும்
வெறும் வயிற்றோடு தான்
பார்ப்பது என் பாணி என்பதால்
அன்றைக்கு காலையும் ஆகாரம்
இல்லை; மதியம் கொஞ்சம் புளி சாதம்.
கொடுக்கப்பட்ட புளி சாதத்தை
ருசிக்க நூறு பேர் இருந்தார்கள் என்பதால்
புளி சாதத்தை மட்டும் கொஞ்சம் எடுத்து கொண்டு,
கையில் பிரசாதமாக கொடுக்கப்பட்ட பழங்களையும்,
புளி சாதத்தையும் பிறருக்கு கொடுத்து விட்டேன்.
பெரிய உடம்புக்கு ஏற்பட்ட நிறைய பசி
அன்று உணவில்லா ஊரிலே என்ன செய்வது என்று
அகோபிலம் மடத்தின் வாசலில் உட்கார்ந்து யோசித்தபோது
யோசித்த ஷணத்தில் படாரென்று மடத்தின் கதவு திறந்தது.
மீதம் இருந்த பாயசம், உணவு என்று சொல்லியவாறே
வெளியே ஒருவர் வந்து அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்தார்.
ஏனோ என் கை முதலில் நீட்டப்பட்டு
இருந்தாலும் கொஞ்சம் தாமதமாகத்
தான் கிடைத்தது.
என்னைவிட அங்கு வேறு யாருக்கோ
பசி அதிகம் இருந்துள்ளது என்பது புரிந்தாலும்
ஏனோ என் உடம்பு என் மனதை கேட்காமல்
பசிக்கு காது கொடுத்ததால்
கிடைத்த தண்டனையாக அதை ஏற்று கொண்டேன்.
இலையில் பிரசாதம் வாங்கிய பின்
அதை அமர்ந்து உண்ண, அந்த மடத்தின்
திண்ணையில் இடம் தேடியபோது
இங்கு உணவருந்தக் கூடாது,
வெளியே போய் உண்ணுங்கள் என்று
உணவை கொடுத்தவரே சொன்னதால்
பசி கொடுத்த படிப்பினையுடன்
அழைத்து சென்ற மனைவியுடன்
வெளியே சென்று உணவருந்த
சென்றபோது என் நண்பர் ஒருவர் எடுத்த வீடியோ.
இன்றைக்கு ஏதேச்சையாக இந்த வீடியோவை
பார்க்க நேரிட்டது
பார்த்தபின் புரிந்து கொண்டது
பசி ருசி அறியாது
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்
அன்று நான் உணவருந்தியதால்
பசியோடு போனது எத்தனை
ஆத்மாக்களோ!!!!!!!!!
என்னில் இருந்து விடுபடவேண்டும்
இல்லை என்றால் என்றும்
நாம் பிச்சைக்காரன் தான்
அவனிடத்தில்; அவனாக மாற
நாம் விடுபட
வேண்டும்
நம்மிடமிருந்து.
எனக்கு உணவளித்த நரசிம்மனுக்கு நன்றி…
இன்னும் செம்மைப்பட வேண்டும் நான்
என்றும் அன்புடன்
Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்
https://m.facebook.com/story. php?story_fbid= 1094247934058221&id= 155239641295282
Share this: