November 16 2022 0Comment

பாரதிக்கு நன்றி:

பாரதிக்கு நன்றி

காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும், – அங்கு
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்தினிடையே – ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் – அங்கு
கேணியருகினிலே – தென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர்போலே – நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதிற் படவேணும், – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் – எங்கள்
கூட்டுக் களியினிலே – கவிதைகள்
கொண்டுதர வேணும் – அந்தக்
காட்டு வெளியினிலே – அம்மா! நின்றன்
காவலுற வேணும், – என்றன்
பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.

எட்டயபுரத்து எழுத்தாணியை பற்றி
பல பேருக்கு பல கருத்துக்கள் உண்டு

முண்டாசு கவியை பற்றிய எல்லோருடைய கருத்தில் இருந்தும் மாறுபட்ட கருத்து என்னுடையது

பாரதி என்னுடைய முன்னோர்கள் நடத்திய பத்திரிகையான சுதேச மித்திரனில் வேலை பார்த்ததாலோ என்னவோ சிறுவயதில் இருந்தே ஒரு ஈர்ப்பு பாரதியிடம்

அதிலும்
பாரதி என்றால்

எனக்கு தெரிந்தது எல்லாம்
எனக்கு நினைவுக்கு வருவது எல்லாம் கீழ்கண்டவைகளே

காணி நிலம்
கண்ணம்மா
செல்லம்மா
குயில்
பாண்டிச்சேரி
எட்டயபுரம்
திருவல்லிக்கேணி
யானை
கருப்புக் கோட்டு
தாடி மீசை

இதில் குறிப்பாக காணி நிலம் எனக்கே எனக்கென்று தேவை என்பதை எப்போதுமே உள்ளிருந்து எனக்கு உணர்த்திக் கொண்டே இருந்தவர் பராசக்தியின் செல்லப்பிள்ளை பாரதி தான்

தென்னை மரம்
தோப்பு
நல்ல காற்று
மனிதர்களின் மாசு இல்லாத புண்ணிய இடம்

எனக்கு சாத்தியமானதற்கு காரணம்
பாரதியும் பரமகல்யாணியும் தான்

உங்களுக்கும் காணி நிலம் கிடைக்க எப்போதும் நாட்டை காதலித்த நம் பாரதியை காதலியுங்கள்

ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணியை
கை பிடித்துக் கொள்ளுங்கள்

காணி நிலம் என்பது கனவாக இல்லாமல் உண்மையாக மாற உங்கள் அனைவரும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

சொந்த காணியில் இருந்து
பாரதி கற்றுக் கொடுத்த திமிர் கலந்த இறுமாப்புடன் சேர்ந்த மிடுக்குடன்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

11 − seven =