September 03 2020 0Comment

பழனியை நோக்கி….

பழனியை நோக்கி….
 
நீண்டு போன இரவுகள் உன்னை பார்க்காததால் ….
 
ஆண்டவர்களின் சதியால் ஆண்டவனே இல்லை என்ற கருத்துடன் ஒரு பாதி…
 
நாதியற்று
மாண்டு மீண்ட பிறகு
எல்லாம் அவனே என்ற கருத்துடன் மிச்சம் மீதி….
 
நான் பழனியில் செவ்வாய் அன்று முடியை கொடுக்கும் நாள் கோவில் நடை திறந்து இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
 
ஜெயிக்கப் பிறந்தவன் நீ….
இம்முறையும் என்னை
வெற்றி பெற வைத்து
நீ ஜெயித்து விட்டாய்.
 
நன்றி உனக்கு.
 
உன்னை நோக்கி மக்கள் திரும்ப ஆரம்பித்துவிட்டார்கள்
இனி எல்லாம் நீயே கதி என்று.
 
கருப்பர் கூட்டத்திற்கு தலைவனும் நீதான்…
கந்தர் சேனைக்கு தலைவனும்
நீதான்…
உன் விளையாட்டை நான்
மிகவும் ரசிக்கிறேன்.
காரணம் எனக்கு தெரியும்
நீ ஒரு
தீராத விளையாட்டுப்
பிள்ளை என்று…
 
உன்னுடன் விளையாட நான் வருகின்றேன் தயாராக இருந்திடு…
 
ஆட்டம் ஆரம்பம்.
 
என்றும் அன்புடன்
டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

five × five =