பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்
பல்லு நாலு போன பிறகு
பேரு வைத்த ஆத்தாவோட
பல்லாங்குழி ஆட வைத்த
Xingping யே…..
வச்சி செய்யுறது என்பது
இது தான் என புரிய வைத்த
சீன நாயே…..
பொறுத்து கொள்கின்றேன்
வேறு வழயில்லாததால்…..
கோ ரோ னா வந்துடுமே
என்கிற பயம் ஒரு புறம்…
வந்து விட்டால்
15 நாட்கள் தனிமை சிறை…
ஆம்புலன்ஸில் ஏற்றும் பொழுதே பணியாளர்கள் தள்ளி நின்றுதான் ஏற்றுவார்கள் என கேள்வி படுகின்றேன்….
மருத்துவமனையில் சேர்த்ததும் 15 நாட்கள் தனி அறை ..
யாரையும் நான் பார்க்க முடியாது..
யாரும் என்னை பார்க்க முடியாது….
மருத்துவ பணியாளர்கள் உணவு மாத்திரை இவற்றை குறிப்பிட்ட இடைவெளியில் நின்று கொடுத்து விட்டு சென்று விடுவார்கள்….
டிவி கிடையாது …
ஃபோன் கிடையாது…
சமூகவலைதளம் கிடையாது …
யாரிடமும் பேச முடியாது..
மனைவி என்னை பார்க்க முடியாது….
நான் மனைவியை பார்க்க முடியாது…குழந்தைகளை பார்க்க முடியாது….
பார்வையாளர்கள் அனுமதி இல்லை…
அறைக்குள் என் நடவடிக்கைகள் சிசிடிவி கேமராவால் கண்காணிக்கப்படும்…
பைத்தியம் பிடிக்கும் நிலை எனக்கு வரக்கூடும்…
15 நாள்கள் கொடுமையான சிறை…
நான்கு சுவர்களுக்கு நடுவில் …..
இதற்கு 21 நாட்கள் குடும்பத்தோடு
இருப்பது ஒன்றும் கடினமல்ல…
என்கிற ஒரே காரணத்திற்காக யோசித்து செயல்பட வேண்டி உள்ளது.
ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிப்போம்…
கொரோனா அச்சத்தை வெல்வோம்..
நாளைக்கு என்ன செய்ய வேண்டும்
என்ற யோசைனையோடு
Dr. ஆண்டாள் பி சொக்கலிங்கம்
Share this: