பயணங்கள் முடிவதில்லை 2.0
உதிர்ந்த சருகுகளின் பின்புறம் எப்படி இருக்கும் என எத்தனை பேருக்கு தெரியும்…
அதற்கான நேரம் எத்தனை பேருக்கு
கிடைத்து இருக்கின்றது…
முகம் தெரியாத முன்
செல்பவரின் கூந்தலிலிருந்து உதிர்ந்த மலர் மனதை ஏதோ செய்கின்றது
இதை ரசிக்க எத்தனை பேருக்கு நேரம் வாய்த்திருக்கிறது…..
நொடி நொடியாய் வாழ்பவனுக்கு இது சாத்தியம்..
நொடி நொடியாய் வாழாதவன் வாழ்ந்தாலும் பைத்தியம்..
எனக்குப் பிடித்த என் குழுவை சேர்ந்த திருமதி அழகர் S வித்யா அவர்களின் செல்ல மகன் சஞ்சய்க்கு இன்று பிறந்தநாள்.
பிரயாணத்தில் நடுவே பாலைவனச்சோலை காண்பது போல
வித்யாவையும் அவருடைய மகனையும் ஓட்டத்தின் நடுவே சந்தித்து
சற்று பேசி
இளைப்பாறி விட்டு
அவ்விடத்தைவிட்டு செல்லும் முன் எடுத்த படம்.
சிலரை சந்திக்கும் பொழுது ஏன் வாழ்க்கையில் இவர்களை சந்திக்க நேரிட்டது என்று சந்தித்த பிறகு எண்ணுவது உண்டு…
சிலரின் சந்திப்போ
மீண்டும் எப்போது
என்ற
எண்ணத்துடன்
கடந்து செல்ல வேண்டியுள்ளது..
எனக்கு மிகவும் பிடித்த
என்னை மிகவும் பிடித்த வித்யாவை
சந்திப்பேன் அடுத்த பிரயாணத்தில்…
பயணங்கள் முடிவதில்லை….
டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this: