October 06 2018 0Comment

படிக்காதவன்

படிக்காதவன்

1971 இல் பிறந்த எனக்கு நிறைய தெரியும் பிறரை விட என நம்பும்

நிறைய மனிதர்கள் இந்த பூமியில் உண்டு.

இருந்தாலும் நான் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கின்றது என்பதை உணர்த்தும் வகையில் சில சம்பவங்கள் சில சமயம் அழுத்தம் திருத்தமாக நடந்து கொண்டும் இருக்கத்தான் செய்கின்றது

அந்த சில சம்பவங்களில் ஒன்று மிகவும் வலிமையானது; அர்த்தம் பொருந்தியது

நான் இன்றும் என்றும்

இப்போதும் எப்போதும்

அதை அவன் செயலாக நம்புகின்றேன்.

அந்த கருத்தோடு

எப்போதும் உடன்படுகிறேன் 

முழுமையாக….

அதற்கு காரணம் 

நான் எக்காலமும்

விரும்பும் 

விரும்பி கொண்டிருக்கின்ற 

எம்பெருமான் முருகன் 

தன் அப்பனுக்கே

பிரணவ மந்திரத்தை

உபதேசித்தவன் ஆயிற்றே……

செந்தூர் முருகன் 

அருளால் பிறந்த என் மகன்

சண்முகமும்

ஓங்காரத்தின்

வழியில்

நடப்பதாலோ 

என்னவோ ஒவ்வொரு முறையும்

அவனிடம் கேள்விகள்

பரிமாறப்படும் போது 

அவன்  

அவன் தந்தையான 

என்னிடம் அடித்துச் சொல்வது

அப்பா உனக்கு எதுவும் தெரியாது.

இந்த ஒத்தை விஷயம் தான் என்னை அதிகம் தேடுதலை நோக்கி இன்றும் என்றும் 

பயணப்பட வைத்துக் கொண்டிருக்கின்றது

தேடுதல் இல்லாதவன் 

தோப்பாக முடியாது 

என்பதை நான் வாழ்கின்ற 

ஒவ்வொரு நொடியும் 

எனக்கு  உணர்த்திக் கொண்டிருக்கிறது

அவன் உயிருக்கு 

நான் 

ஆதாரமாக இருந்து 

இருந்தாலும்

நான் 

இன்று 

உயிரோடும் 

உயிர்ப்போடும்  

இருப்பதற்கு ஆதாரமாக 

இருப்பது

உனக்கு ஒன்றும் தெரியாது என்கின்ற 

என் மகனின் இன்றியமையாத 

வைர வரிகள் தான்

என்னை உயிர்ப்போடு 

உலவவிட்டு கொண்டிருக்கின்ற

என்  மகனுக்கு

நன்றி

என்றாவது்

ஒரு நாள்

உன் வாயால்

அப்பா 

உனக்கும் ஏதோ

தெரியும்

என்பதை 

நீ ஒப்புகொள்ளும்  

வரை

#தேடுதல் தொடரும்….

படிப்பும் தொடரும்

படிக்காதவன்

என்கின்ற

பெயர் நீங்கும் வரை…….

என்றும் அன்புடன்

Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

four × 4 =