October 18 2018 0Comment

நிரஞ்சனா -ஹிந்து தன்னெழுச்சி மாநாடு

நிரஞ்சனா
வேலூர் ஒன்னுபுரம் திருமதி.நிரஞ்சனா தண்டபாணி
பிறந்தது முதல் இதுநாள் வரை ஒரே இடத்தில் வாழ்க்கை
ஒரு வருடம் முன் வரை தன் சொந்த ஊரை கூட தனியாக தாண்டாதவர்
மூன்று குழந்தைகளுக்கான சாமனிய தமிழக தாய்
பள்ளி படிப்பை கூட தாண்டாத சாதாரண பெண்மணி
அக்டோபர் 14 ,2018  பல ஆயிரக்கணக்கான பேருக்கு முன்னால் மைக் பிடிக்கின்றார்
பயம் இல்லாமல் பேசுகின்றார்
என்றால் அதற்கு ஒரே காரணம்
வெறி …..
ஜெயிக்க வேண்டும் என்கின்ற வெறி…
பிறந்தது சாவதற்கு மட்டும் அல்ல
சாதனை புரிவதற்கும் என்கின்ற எண்ணம்
ஏதாவது செய்ய வேண்டும்
வாழ்க்கை வாழ்வதற்கல்ல
கொண்டாடுவதற்கு.என்கின்ற துல்லிய
குறிக்கோள்
தன் பிறப்பிற்கும்
அர்த்தம் வேண்டும்
என்கின்ற வேட்கை
என அடுக்கலாம்
ஆயிரம் காரணங்களை
எல்லாவற்றிற்கும் மேலாக
அவள் நம்பும்
தண்டபாணி,
தண்டபாணி
உருவத்தில்
கூடவே
கணவனாக
இருக்கும் போது
வெற்றியும் இவளையே
விரும்பும் என்பதில்
இருவேறு கருத்து இருக்க முடியுமா என்ன?????
மிகப்பெரிய நன்றியை ஆண்டாளுக்கு
தெரிவித்து கொள்கின்றேன்
இவளையும் என்னுடன்
உன் சார்பாக இணைத்ததற்க்கு
என்றும் அன்புடன்
Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

one + twenty =