September 13 2020 0Comment

நாற்காலி……

நாற்காலி
 
இந்த ஒத்தை
வார்த்தைக்காக தானே
மொத்த
உலகமே சண்டையிட்டுக்
கொண்டு இருக்கின்றது…..
 
அலுவலகம்
அரசியல்
ஆன்மிகம்
 
என அனைத்து
இடத்திலும்
நாற்காலிக்காக தானே
எத்தனை எத்தனை நகர்வுகள்
நடந்து
நகர்ந்து கொண்டே இருக்கின்றன…
 
நாலு காசு பார்த்த நடிகர்களும்
நாற்காலிக்காக தானே
நடித்துக் கொண்டிருக்கின்றனர் இன்று……
 
சுட்டுப் போட்டாலும்
நடிப்பே
வராத
நாடாளுபவர்களும்
நாடாண்டவர்களும்
நாடாள போகின்றவர்களும்
நாற்காலியை கைப்பற்றுவதற்காக
தானே
நடித்துக் கொண்டே இருக்கின்றார்கள் இப்போதும் எப்போதும்…..
 
ஒருவருக்கு தான் உரிமை உண்டு என்றாலும்
கிட்டத்தட்ட எல்லோரையும்
ஆசைப்பட வைக்கும்
உன் திறமை அசாத்தியமானது.
 
நாற்காலியே
உனக்கு தான்
இதில்
எத்தனை சந்தோஷம்!!!!!-
அந்த வகையில்
நிரந்தர வெற்றியாளன் நீ மட்டுமே
எதுவுமே
நிரந்தரமில்லாத இந்த உலகில்……
 
1960 களில்
சென்னை பட்ரோடு
ஏழுகிணறு தெருவில்
உள்ள என் மாமா
திரு வேணு கோபால் யாதவ் அவர்களுடைடைய தலைமையில் நடைபெறும் கட்சி கூட்டங்களுக்கு
வருகைதரும் போது
திமுகவின் நிறுவன தலைவர்
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்
பேரறிஞர்
டாக்டர் CN.அண்ணாதுரை
அவர்கள் விரும்பி
அமர்ந்து செல்லும் நாற்காலியில்
 
1970 களில்
டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம் …
 
என்றும் அன்புடன்
டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

14 + sixteen =