September 15 2018 0Comment

நாராயணா !!! நாராயணா !!!

நாராயணா !!! நாராயணா !!!

 

இந்த உலகத்தில்

வாய்ப்பு கிடைத்து தவறு செய்து 

மாட்டி கொண்டவனை கெட்ட

மனிதன் என்கின்றோம்

வாய்ப்பு எதுவும்  கிடைக்காததால் 

தவறு எதுவும் செய்யாதவனை 

நல்ல மனிதன்  என்கின்றோம்

உண்மையில் 

வாய்ப்பு கிடைத்தும் 

தவறு செய்யாதவனே

மாமனிதன் என

புரிந்துகொள்ள 

தவறி விட்டோம்…… 

தவறவிட்ட நண்பர்களே!!!!!

வாய்ப்புகள்  ஆயிரம் 

நீங்கள் ஏற்படுத்தி கொடுத்தாலும்

தன்னிலை என்றும் மாறாத 

என் நண்பர் #நாராயணமூர்த்தியே

என்னை பொறுத்தவரை 

என் வாழ்வில்

நான் கண்ட மாமனிதர்..

இவரிடம் வாங்கும்

தங்கம் கூட செம்பு கலந்தால் 

தான் உபயோகப்படுத்த முடியும்

ஆனால் இவரின் 

குணாதிசயத்திற்கு இந்த 

விதி பொருந்தாது

காரணம்

குணத்தால் தங்கம் என்றாலும்

செம்பும் கூட இந்த தங்கத்திடம் 

நெருங்காது

அந்த அளவிற்கு தூய்மையானவர்

மனைவியும் கணவன் வழியே

வாசுகி வள்ளுவர் போல…….

என் மேல் மாறா பாசம் கொண்டவர்கள்

தொலைகாட்சி நேரலையில் 

ஒரு முறை தொடர்பு கொண்டு 

என்னிடம் கேள்வி கேட்டுள்ளார்….

ஏனோ திடீரென்று 

ஒரு நாள்

வகுப்பிற்கு வந்தார்;

இருந்தார் அனைவருடனும்;

வென்றார் அனைவரையும்;

சென்றார் வெற்றியுடன்………..

காட்டில் மிருகங்கள் ஆயிரம்

இருந்தாலும் சிங்கமே  சிறப்பு

மந்திரங்கள் ஆயிரம் இருந்தாலும்

மந்திர ராஜ பதயே சிறப்பு

சிகரங்கள் ஆயிரம் இருந்தாலும் 

இமயமலையே சிறப்பு

சக்கரங்கள் ஆயிரம் இருந்தாலும் 

சுதர்சன சக்கரமே சிறப்பு

எனக்கு மாணவர்கள் என ஆயிரம் பேர்

இருந்தாலும்

இவரே சிறப்பு

அந்த வானத்தை போல

மனம் படைத்த என் 

நாராயணனின் மகள் திருமண விழாவில் 

இன்று பங்குபெற்றதை 

என் வாழ்நாளின்மிக சிறந்த

மகிழ்ச்சி  நிகழ்வாக கருதுகின்றேன்

என்னை எழ வைத்தது

துரோகங்கள்  என்றால்

துரோகங்களை மீறி 

இமாலய வெற்றி  இலக்கை 

என்னை தொட வைத்தது

பரிசுத்த தூய எண்ணம் கொண்ட 

நாராயணன் போன்ற மாமனிதர்கள் தான்

வாழ்க இவரின் குடும்பம் அனைத்து வளங்களுடன்

இவருடன்  நட்பு பாராட்ட  

வாய்ப்பு தந்த

தாயாருக்கு  நன்றி

என்றும் அன்புடன்

Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

eleven − seven =