நாராயணா……
ஆண்டாள்
கொடுத்த
30 லட்சம்
ரூபாய்
காரில்
காருக்குள்
குளிரூட்டப்பட்டு
தனியே
போனாலும்
சென்னை
வெயிலால்
வெறுப்படைந்து
மதிய
தூக்கம்
கண்
தழுவ
போரூர்
சிக்னலில்
சிக்னலுக்காக
நின்றபோது
வயதான
உயரமான
அழுக்கு
வெள்ளை
வேட்டி
சட்டையுடன்
என்
இடது பக்க
ஜன்னலை
தட்டிய
போது
அவர்
முகத்தை
பார்த்தேன்
ஏனோ
என்
அப்பா
அந்த
நொடியில்
நினைவுக்கு
வந்துபோனார்
என் அப்பாவும்
நான் கல்லூரி
படிக்க
இப்படித்தானே
பணம்
கேட்டிருந்திருப்பார்
வந்த
நொடி
நினைவை
உடைத்து
சடாரென்று
பர்சை
எடுத்து
அவரை
என்
பக்கம்
வரச் சொன்னேன்
அதுக்குள்
சிக்னல்
விழுந்ததால்
முட்டா
கூட்டம்
அதிகம்
வாழும்
சென்னையின்
மைந்தர்
ஒருவர்
பாம்
என்று
horn
சத்தம்
சடக்கென்று
எனக்குள்
ஒரு
பதட்டம்
பணம்
கொடுக்க
முடியாமல்
போய்
விடுமோ
என்று
அவசரமாக
வந்தவரிடம்
ரூபாயை
திணித்த
போது
அவர்
பணத்தையே
பார்க்காமல்
என்
கண்ணை
பார்த்து
நாராயணா
நாராயணா
என்று
அழுத்தமாக
சொன்னபோது
பகீர்
என்றது
வெலவெலத்துப்
போய்
விட்டேன்
ஆண்டாளை
தவிர
இந்த
பூமியில்
வேறு
யாராலும்
இவ்வளவு
அக்க்ஷர
சுத்தமாக
சொல்ல
முடியாது
சொன்னவள்
ஆண்டாளோ
அப்படித்
தானே
இருக்கமுடியும்
பிச்சை
எடுத்து
தான்
பிழைப்பு
என்றாலும்
நாராயணனே
பரப்ப்ரமம்
என்பதை
மறவாத
மனம்
அவள்
ஒருத்திக்கு
தானே
இப் பூமியில்
உண்டு
பெரியவர்
சொன்னதை
கேட்க தான்
என்
காதுகள்
இரண்டும்
என்
மூலமாக
இப்பிறவி
எடுத்திருக்கும்
போல…..
ஒன்று
நிச்சயம்
பெரியவர்
சொன்ன
வார்த்தைக்கு
சன்மானமாக்க
இந்த
மொத்த
பூமியும்
பத்தாது
நன்றி
ஆண்டாளே
இந்த
அற்புத
ஆனந்த
சந்தோசத்தை
மீண்டும்
அடைய
அடுத்த பிறவியும்
எனக்கு
இப் பி்றவியையே
போலவே
கொடு
தப்பாது,,,,,,,,,,,,,,,,,,
கட்டாய கவிஞன்
ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this: