March 02 2018 0Comment

நாம மலை ஸ்ரீநிவாசப் பெருமாள்:

நாம மலை ஸ்ரீநிவாசப் பெருமாள்:
சேலம் மாவட்டம் நாம மலையில் அமைந்துள்ள இக்கோவிலில் பெருமாள் #ஸ்ரீநிவாசப் பெருமாளாக அருள்பாலிக்கிறார்.
இவர் தாயார் ஸ்ரீதேவி-பூதேவி ஆகியோருடன் அழகுறக் காட்சி தருவது மிகச் சிறப்பாகும்.
நாம மலையில் மிகப்பெரிய அளவில் பாறைகளால் ஆன குளம் போன்ற ‘#பாலி’ ஒன்று காணப்படுகிறது. இந்த பாலியின் தீர்த்த நீர் அதிகளவு அடர்த்திகொண்டதாம்.
இதில், ராமனும் சீதையும் நீராடியதாக நம்பிக்கை. அதேபோல் அடிவாரத்தில் கிணறு ஒன்று உள்ளது.
பெருமாளைத் தரிசிக்கும்போது, இந்தக் கிணற்று நீரை தீர்த்தமாகத் தருகிறார்கள். #மூலிகைத் தன்மை கொண்ட இந்த தீர்த்தத்தை நோய் தீர்க்கும் அமிர்தமாகக் கருதுகின்றனர்.
ஒருமுறை இந்தக் கோயிலின் அர்ச்சகர் ஒருவரது கனவில் தோன்றிய பெருமாள், ”#ராமானுஜர் இல்லாததே இத்தலத்தின் ஒரே குறை” என்றாராம். அந்தக் குறையைக் களையும் விதம், ஸ்ரீராமானுஜர் விக்கிரத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர், பக்தர்கள்.
வடக்கு நோக்கி அருளும் இந்த ராமானுஜரின் திருமுன் பாலைச் சமர்ப்பித்து சில நிமிட வேண்டுதலுக்குப் பிறகு, பாத்திரத்தை திறந்தால் பால் திரிந்து தயிராகியிருக்குமாம். இப்படி பால் திரிந்துபோனால், பக்தர்களுக்கு ராமானுஜரின் திருவருள் பரிபூரணமாகக் கிடைத்துவிட்டது என்பது #நம்பிக்கை.
இத்திருத்தலத்துக்கு வரும் பக்தர்கள் மூலவரை வணங்கிய பின், தங்கள் வேண்டுதல் நிறைவேறுமா என்பதை அறிய, திருவுளச் சீட்டு போட்டு இறைவனிடம் உத்தரவு கேட்கின்றனர்.
இதன் மகிமையை உணர்ந்த #கிருஷ்ண தேவராயர் 16-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தக் கோவிலை கட்ட ஆரம்பித்தார்.
பூஜையின்போது மூலவர் பெருமாளின் திருமுகத்தில் #வியர்ப்பதைக் காணலாம். மேலும் பெருமாள் இங்கு தரிசிக்கும் பக்தர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப சிரிப்பு கோபம் என மாறுபட்ட #முகபாவங்களைக் காட்டுகிறார்.
மேலும் #திருப்பதி மலைவாழும் ஏழுமலையான், தமது சயன நேரத்தில் இங்கு வந்து உறங்கி ஓய்வெடுத்துச் செல்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
Share this:

Write a Reply or Comment

ten − two =