February 20 2022 0Comment

நாடு எங்கே போகின்றது…..

நாடு எங்கே போகின்றது

சமீபத்தில் நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்ள முடியாததால்
வாழ்த்து சொல்வதற்காக  இன்று கள்ளக்குறிச்சி வரை சென்றிருந்தேன்.
சென்ற வீட்டிற்கு எதிரே உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த பள்ளி இருந்ததால் அன்பு நண்பரிடம் கேட்டேன்.
தேர்தல் களம் எப்படி உள்ளது என்று?
எங்கள் வீட்டில் ஐந்து வாக்கு.
X கட்சி ஒரு வாக்குக்கு 4000 ரூபாய் மற்றும் ஒரு தங்க மூக்குத்தி வீதம் 20000 + ஐந்து தங்க மூக்குத்தி என கொடுக்க முன்வந்தார்கள்
நாங்கள் வாங்கவில்லை.
Y கட்சி ஒரு வாக்குக்கு 5000 ரூபாய் மற்றும் ஒரு மூட்டை அரிசி வீதம் 25000 + ஐந்து மூட்டைகள் அரிசி என கொடுக்க முன்வந்தார்கள்
நாங்கள் வாங்கவில்லை என்று சொல்லியவாறே படியேறினார்.
நாடு எங்கே போகின்றது. இந்த துன்பங்களுக்கு எல்லாம் யார் காரணம் என்ற கேள்வியை யாராவது உங்களிடம் கேட்டால் இந்தியாவை 2040க்குள் வல்லரசாக மாற்றுவோம் என்று இனி யாராவது உங்களிடம் சொன்னால் சொல்லுங்கள் உரக்க பணம் வாங்கி வாக்களிக்கும் மக்களே காரணம் என்று.
முதலில் நல்லரசு உருவாகட்டும் பின் வல்லரசு என்கின்ற விஷயத்தை சிந்திப்போம் என்று.
ஜாதி மத இன கட்சி வேறுபாடின்றி அத்தனை பேரும் ஏறத்தாழ பணம் கொடுத்து இருக்கிறார்கள் இந்த தேர்தல் களத்தில்.
வெட்கப்பட வேண்டிய தருணம் இது-
அரசியல் கட்சிகளின் தலைவர்களை குறித்து நான் வெட்கப்படவோ கவலைப்படவோ இல்லை.
ஆனால் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்கும் நம் சக மனிதர்களை குறித்து நாம் வெட்கப்பட்டே ஆகவேண்டும்
திருத்த வேண்டியது அரசியல்வாதிகளை அல்ல. திருத்த வேண்டியது
திருத்தப்பட வேண்டியது ஆள்பவர்களை
உருவாக்கும்
தீர்மானிக்கும்
தேர்ந்தெடுக்கும் வாக்காளர்களை.
மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்.
பணம் கொடுத்து வாக்கு சேகரித்த வாக்காளருக்கு வாக்களிக்க மறுத்த மாமனிதன் என்ற பெயரை நீங்கள் அனைவரும் பெற வேண்டும்.
Share this:

Write a Reply or Comment

sixteen + 8 =