May 30 2018 0Comment

நாடியம்மன் கோவில்:

நாடியம்மன் கோவில்:

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள #அம்மன் கோயிலாகும்.

மூலவர்:

இக்கோயிலில் மூலவராக நாடியம்மன் உள்ளார். மூன்று குதிரைகள் காவலுக்கு நிற்கின்றன. அம்மன் சன்னதியின் முன்பாக சிம்மன் உள்ளது.

ராஜகோபுரத்துடன் இக்கோயில் அமைந்துள்ளது. திருவிழாக் காலத்தில் பதுமைகள் பூச்சொரியும் நிகழ்ச்சி இங்கு சிறப்பாக நடைபெறும்.

வரலாறு :

மன்னர் சரபோசி வேட்டையாட வந்தபோது ஒரு பெண்ணைக் கண்டதாகவும், அவரைத் தொடர்ந்து சென்றபோது அப்பெண் ஒரு புதரில் மாயமாக மறைய அங்கு இரண்டரையடி உயரத்தில் கற்சிலையைக் கண்டதாகவும், கோட்டை சிவன் கோயில் குருமார்களை அழைத்து அங்கேயே அம்மனுக்கு ஒரு கோயில் அமைத்ததாகக் கூறுவர்.

அமைவிடம் :

இக்கோயில் தஞ்சாவூருக்குத் தென்கிழக்கே 47 கிமீ தொலைவில் பட்டுக்கோட்டையில் அமைந்துள்ளது.

Share this:

Write a Reply or Comment

three × five =