October 02 2021 0Comment

நன்றி #DrAndalPChockalingam #SriAandalVastu

நன்றி

(29/09/2021)  அன்று எங்களிடம் திருச்சி இலங்கை தமிழர் வாழ்வு முகாமில் இருந்து வவுனியாவை பூர்வீகமாக கொண்ட அன்பு சகோதரி ஒருவரின் திருமணத்திற்கு மாங்கல்யம் வாங்கி தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதைக் கேள்விப்பட்ட என்னுடைய ஆருயிர் நண்பர் பிரசன்னா அவர்கள் உடனடியாக அன்பு சகோதரியின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுக்க முன்வந்தார்.

இன்று ( 30/09/2021)
VHP திருச்சி காரியாலயத்தில் வைத்து VHP தென்தமிழக அமைப்பாளர் சேதுராமன் ஜி அவர்களின் பொற்கரங்களால் நண்பர்கள் திருகோவிந்தன் மற்றும் முத்தமிழ்ச் செல்வன் முன்னிலையில் அன்பு சகோதரிக்கு அவர் கேட்ட விஷயத்தை கொடுத்த போது எடுத்த படம்.

அன்புச் சகோதரி 100 ஆண்டு காலம் நிம்மதியாக நிறைவாக மகிழ்ச்சியாக ஆனந்தமாக ஆரோக்கியமாக செல்வ செழிப்புடன் வாழ ஆண்டாளை
பிரார்த்திக்கிறோம்.

உதவி கேட்ட அன்பு சகோதரிக்கும் உதவி செய்த அன்பு சகோதரர்
பிரசன்னாவிற்கும் நன்றி.

கொடுப்பவனுக்கே இந்த உலகம் என்பதை பிறருக்கு உணர்த்துவதற்காக இந்த பதிவு.

தயவுசெய்து உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உதவி தேவைப்படும் பட்சத்தில் உங்களால் முடிந்ததை கொடுங்கள் காரணம் காதறுந்த ஊசி கூட நம் கூட வரப்போவதில்லை கடைசியில்.

நன்றி ஆண்டாளுக்கு

என்றும் அன்புடன்

Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்

May be an image of 5 people, people standing and indoor

Share this:

Write a Reply or Comment

eleven − 4 =