February 20 2023 0Comment

நன்றி

நன்றி

 

இன்று (12/02/23)
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக திருப்பூர்
திரு. சி.பி.ராதாகிருஷ்ணன்(CPR) அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு ஶ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக நான் மனமார்ந்த வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கின்றேன்

சரியாக பத்து வருடங்களுக்கு முன்பு சிபிஆர் அய்யா & அவரது மனைவி திருமதி சுமதி அவர்களுடன் சேர்ந்து என் ஆருயிர் நண்பர் திரு நாகேந்திரன் அவர்களின் திருமணத்தை திருப்பூரில் நடத்திய போதிலிருந்து அண்ணன் அவர்களுடன் நல்ல பழக்கம் என்றாலும் அதற்கு முன்பே திருமதி சுமதி ராதாகிருஷ்ணன் அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க விமான திருப்பணிக்காக எங்கள் குழுவுடன் இணைந்து எங்கள் மூலமாக செய்த உதவிகள் காரணமாக எங்கள் குழுவிற்கு நல்ல பரிச்சயம் உண்டு.

திருமதி சுமதி அவர்களுக்கு ஆண்டாள் மேல் உள்ள ஈடுபாடு மெச்சத்தக்கது.

தாமதமாக இந்த பதவி ஐயா அவர்களுக்கு கிடைத்திருந்தாலும்
இதற்கான காரணமாக நான் திருமதி சுமதி அம்மா அவர்களையே சொல்வேன்.

நான் அதிர்ந்து போய் பார்த்த மிக வலுவான மற்றும் மிக எளிமையான ஆளுமையாக திருமதி சுமதி அவர்களை சொல்வேன்

ஆண்டாள் இந்த நல்ல தருணத்தில் ஆரோக்கியத்தையும் சகல விதமான மகிழ்ச்சியையும் இவர்களது குடும்பத்திற்கு எப்போதும் கொடுக்கட்டும்…

என்றும் அன்புடன்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

17 − 14 =