நன்றி வேணு மாமா….
என்னுடைய குடும்பம்
இந்த உலகில் உச்சக்கட்ட நன்றியோடு இருக்க வேண்டிய
ஒரே ஒரு குடும்பம் என்றால்
அது எங்களுடைய
வேணு மாமாவின்
குடும்பத்திற்கு தான்….
நேர்மையின் உச்சகட்டம்
பாசம் நேசம் என்கின்ற வார்த்தைகளின் அடையாளம்
70 வருடங்களுக்கு முன்னே
ஒன்றுமே இல்லாத போது,
இந்த உலகில் என் தந்தைக்கு யாருமே இல்லாத போது,
வெறுங்கையோடு நிராயுதபாணியாக என் தந்தை ஒதுங்க நிழல் இன்றி நின்ற போது
என் தந்தையை அரவணைத்தவர்
தான் எங்கள் வேணு மாமா…
எங்கள் வேணு மாமா வீட்டில்
பசு மாடு மற்றும் கன்றுகளோடு
பொழுதை கழித்த நாட்கள் இன்றைக்கும் பசுமையானவை…
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள்
அதைவிட சிறப்பானவை….
உறியடிக்கும் போது
வெற்று உடம்பில்
வேகமாக தண்ணீரை பிறர்
அடித்தபோது வேணு மாமா கூட இருந்ததால் வலிக்கவில்லை
மீன் சாப்பிடும் போது
தொண்டையில் முள் மாட்டிக் கொண்ட போது வேணு மாமா பக்கத்தில் இருந்ததால் வலிக்கவில்லை
பலமுறை விழுந்து அடிபட்டு
ரத்தம் ஆறாக ஓடின போதும்
பெரிய வலி ஏதும் இன்றி
வலியே வேறு வழியின்றி ஓடியது வேணு மாமா
நீ பக்கத்திலிருந்ததால்……
எனக்கே எனக்கான
உறவென்றால்
மனோவையும்
ஷோபாவையும்
ஆனந்தையும்
பானுவையும்
பிரேமா மாமியையும் இன்றி
வேறு யாரை சொல்ல முடியும்
நீ விட்டுப் போன சொந்தங்களுடன் உன்னுடைய நினைவுகளுடன்
உன்னுடைய குடும்பம் செய்த உதவிகளை நினைத்து
என்றும் நன்றியுடன்
சற்று அசந்து போய் தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
வாழ வேண்டுமே என்று
நீ மறைந்த இந்த நாளில்
உன் நினைவுகளோடு
என்றும் அன்புடன்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்