உலகத்தில் வாழும் அத்தனை ஆண்டாள் பக்தர்கள் சார்பாக தமிழக அரசுக்கு மனமார்ந்த பெரிய நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.
உலகத்துக்கே படி அளக்க கூடிய லோகமாதாவான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார்க்குஅனுதினமும்பல படிக்கணக்கில் நைவேத்தியம் நடத்த வேண்டிய இடத்தில் 1990 – 1991 ம் ஆண்டு முதல் விவசாயம் இல்லாததை காரணம் காட்டி அன்றிலிருந்து இன்று வரை வெறும் 400 gm அரிசி மட்டுமே வழங்கி நைவேத்தியம் படைக்கப் பட்டு வருகிறது.
இவ்விடத்தில், இந்த விஷயம் சம்பந்தமாக சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணன் திரு.சேலம் இளங்கோவன் அவர்கள், அன்பு அண்ணன் பாசமிகு முன்னாள் அமைச்சர் திருவண்ணாமலை திரு.அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள், திரு.லட்சுமி நாராயணன் அவர்கள் ஆகியோர்கள் மூலமாக தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டதில் உடனடியாக இந்த விஷயத்தை சரி செய்யும் வகையில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிசாமி அவர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியாருக்கு தேவையான அனைத்து நைவேத்திய மற்றும் கைங்கரிய பொருட்களும் 1991க்கு முன் என்ன நிலை இருந்ததோ அதன்படியே வழங்க ஆணை பிறப்பித்து விட்டார்கள்.
இந்த நல்ல செயலை செய்த இந்த அரசுக்கு கோடான கோடி ஆண்டாளின் பக்தர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.