June 06 2021 0Comment

நன்றி தமிழக முதல்வருக்கு:

நன்றி தமிழக முதல்வருக்கு:

தமிழ்நாடு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக (State Public Prosecutor) திரு ஹசன் முகமத் ஜின்னாஅவர்களை நியமித்த மாண்புமிகு தமிழ்நாடு #முதலமைச்சர்முத்துவேல்கருணாநிதி_ஸ்டாலின் அவர்களுக்கு ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவை நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது. திரு ஹசன் முகமத் ஜின்னா அவர்கள் என்னுடைய மிக மிக நெருக்கமான நண்பர் மற்றும் என் குடும்ப உறுப்பினர். என்னுடன் 100 % புரிதல் உள்ள அற்புதமான மனிதர் எம் மதம் சம்மதம் என்று வாழ்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்,மதுரை மீனாட்சி மற்றும் மதுரை யோக நரசிம்மர் மீது அளப்பரிய ஈடுபாடு கொண்டவர் பயணங்களும் புத்தகங்களும் இவரின் ஒரே வழிகாட்டி பிறந்ததிலிருந்து ஒரே தலைமை ஒரே தலைவர் அவர் இருக்கும் கட்சியில் லட்சம் கோடி தொண்டர்கள் இருந்தாலும் தலைமை மீதான இவரின் விஸ்வாசம் இமயத்தின் உயரம். எங்கள் பாதை வேறுவேறாக இருந்தாலும் ஆரோக்கியமான விவாதங்களின் போது என்னுடைய கருத்துக்களுக்கு எப்பொழுதும் உரிய மரியாதை கொடுப்பதில் இவருக்கு நிகர் இவரே. மனிதம் படைக்க இவரின் பணி சிறக்கட்டும் வெற்றிகள் தொடரட்டும் என்னுடைய நீண்டநாள் கேள்வியான உன் சிறகை விரிக்கும் வரை நீ எட்டும் உயரம் யாரறிவார்? என்பதற்கு பதிலாக உண்மையான தொண்டருக்கு உச்ச பதவி கொடுத்த தமிழக முதல்வருக்கு மீண்டும் ஒருமுறை

நன்றி

டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

தலைவர்

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை

Share this:

Write a Reply or Comment

2 × one =