April 20 2019 0Comment

தையல்நாயகி திருக்கோயில்:

தையல்நாயகி திருக்கோயில்:
 
#வைத்தீஸ்வரன் கோயில் தையல்நாயகிக்கு கோயில் நிலங்கள் ஏராளம். #புவனத்துக்கே சொந்தகாரியான அம்மனுக்கு 95 வேலி நிலம் உடைமையாக இருந்தது.
ஒருமுறை #கபிஸ்தலம் பண்ணையார் அம்மனை வழிபட வந்தார். நூறு வேலி நிலத்துக்குச் சொந்தகாரரான #பண்ணையார் தையல்நாயகியை விடவும் தன்னிடம் கூடுதல் நிலம் இருப்பது கூடாது என்ற எண்ணத்தில் அம்மனுக்கு ஐந்து வேலி நிலத்தை எழுதி வைத்தார்.
இத்தகைய உயர்ந்த உள்ளம் படைத்த பக்தர்களைப் பெற்றதால் வைத்தீஸ்வரன் கோயில் தையல்நாயகி பேரும் புகழும் பெற்றாள். அதேபோல பொய்யாத நல்லூர் #தையல்நாயகிக்கும் பேருக்கும் புகழுக்கும் குறைவில்லை.
பொய் பேசாத மக்கள் வாழும் ஊர் என்பதால் இவ்வூர் #பொய்யாத நல்லூர் என பெயர் பெற்றதாகக் கூறுகின்றனர்.
#சிறப்பம்சங்கள் :
வைத்தீசுவரன் கோயில் தையல்நாயகியின் மூத்த சகோதரியே இங்குள்ள தையல்நாயகி என்பது சிறப்பு.
Share this:

Write a Reply or Comment

seven − five =