தேவப்பிரயாகை
தேவப்பிரயாகை (Devprayag) அல்லது திருக்கண்டமென்னும் கடிநகர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.
பெரியாழ்வாரால்பாடல் பெற்ற இத்தலம் உத்தராகண்டம் மாநிலத்தில் தெக்ரி கார்வால் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இத்தலம் ரிஷி கேசத்திலிருந்து பத்திரிநாத் செல்லும் வழியில் 45வது மைலில் கடல் மட்டத்திலிருந்து 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
கோயில் தகவல்கள்:
மாநிலம்:உத்தராகண்டம்
மாவட்டம்:Tehri Garhwal
அமைவு:Uttarakhand, இந்தியா
#தல வரலாறு:
தேவப்பிரயாகையின் சிறப்பை பற்றி பாத்மபுராணம், மத்ஸயபுராணம், கூர்மபுராணம் அக்னிபுராணம் ஆகிய புராணங்களில் கூறப்பட்டுள்ளன.
மிகச் சிறந்த யாகத்தை பிரம்மன் இங்கு துவங்கியதால் இவ்விடத்திற்கு பிராயாகை என்னும் பெயராயிற்று.
திருமாலையே தேவனாக கருதி இவ்விடத்தில் யாகம் செய்யப்பட்டதால் தேவப்பிராயாகை என்றாயிற்று.
தேவேந்திரன் இந்த தேவப்பிரயாகையைப் பாதுகாக்கிறான். இங்குள்ள ஆலமரம் தான் ஊழிக் காலத்தில் அழியாமல் இருக்குமென்றும் அதன் இலையில்தான் பெருமாள் குழந்தையாக பள்ளிகொள்வார் என்றும் மத்ஸய புராணம் கூறுகிறது.
இத்தலத்தில் வழிபாடியற்றுவதும் நீராடுவதும் ஒவ்வொரு இந்துவும் செய்ய வேண்டிய கடமையாகக் கருதப்படுகிறது.
#இறைவன், இறைவி :
இத்தலத்தில் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் நீலமேகப் பெருமாள் (புருஷோத்தமன்)எனவும் வேணி மாதவன் என்றும் அழைக்கப்படுகிறான்.
இறைவியின் பெயர் புண்டரீக வல்லி, விமலா என்பனவாகும்.
தீர்த்தம் மங்கள தீர்த்தம், கங்கை நதி, பிரயாகை ஆகியன. விமானம் மங்கள விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது.
#சிறப்புகள் :
பெரியாழ்வாரால் 10 பாக்களால் பாடல் பெற்ற இத்தலத்தில் தான் கங்கை ஆறும் யமுனை ஆறும் கலக்கின்றன அளகநந்தா ஆறும் பாகிரதி ஆறும் சங்கமிக்கின்றன.
மேலும் சரஸ்வதி ஆறும் இவ்விடத்தில் கலப்பதால் இது பஞ்சப் பிரயாகை என அழைக்கப்படுகிறாது எனவே இங்கு வெள்ளப் பெருக்கும் நீரின் விரைவும் இங்கு திடீரென உண்டாகும்.
இத்தலத்திற்கருகிலேயே ஆஞ்சநேயர், கால பைரவர், மகாதேவர், பத்ரிநாதர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.
புராண இதிகாசங்களின்படி பிரம்மன், பரத்வாஜர், தசரதன் ஆகியோருடன் இராமனும் இங்கு தவமியற்றினார்கள்.
ஆழ்வாரால் பாடல் பெற்ற பெருமாளை இங்கு ரகுநாத்ஜி என்று அழைக்கிறார்கள். கங்கை, யமுனை, சரஸ்வதி இம்மூன்றும் கூடுமிடம் திரிவேணியாகும்.
#தேவப்பிரயாகை #உத்தராகண்டம் #பைரவர், #மகாதேவர், #பத்ரிநாதர்
Share this: