April 16 2019 0Comment

தேவநாத பெருமாள் திருக்கோயில்:

தேவநாத பெருமாள் திருக்கோயில்:
பெருமாளுக்கு தீர்த்த தாகம் ஏற்பட்டபோது அங்கிருந்த கருடாழ்வாரிடம் தீர்த்தம் கொண்டு வரப் பணித்தார். அவர் எடுத்து வர தாமதம் ஆனதால் ஆதிசேஷனிடம் சொல்லி தன் வாலால் அடித்து பெருமாளுக்கு தீர்த்தம் தந்தார்.
அதனால் அதற்கு சேஷ தீர்த்தம் என்று பெயர் வந்தது. இது ஒரு பிரார்த்தனை கிணறு ஆகும். இது கோயிலின் உள்ளே தெற்கு பிரகாரத்தில் உள்ளது.
இதில் #உப்பு #மிளகு #வெல்லம் போட்டு பிரார்த்தனை செய்தால் வியாதிகள் குணமாகும். கட்டி,பால் உண்ணி ஆகியவை மறையும்.
இவ்வூர் #ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட தலம். அருகில் உள்ள மலை பிரம்மா தவம் செய்த இடம். அதனால் பிரம்மாச்சலம் என்றும் பெயர் பெற்றது. ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட கிணறு இன்றும் கோயிலில் உள்ளது.
#பிரம்மா, #சிவன், #இந்திரன், பூமாதேவி, பிருகு , மார்க்கண்டேயர் முதலானோர் தவம் செய்த தலம்.
 இத்தலம் நடு நாட்டு திவ்ய தேசங்களில் மிகவும் சிறப்பு பெற்றது.
 கலியனாலும் நிகமாந்த மகா தேசிகனாலும் பாடப்பெற்றுள்ளது.
வேதாந்த தேசிகன் இவ்வூரில் சுமார் 40 ஆண்டுகள் வசித்து வந்தார். அநேக நூல்களை எழுதினார். அவர் எழுந்தருளிய இடம் ஸ்ரீ தேசிகன் திருமாளிகை என்ற பெயரோடு இன்றும் விளங்குகிறது.
 வேதாந்த தேசிகன் தன் திருக்கரங்களாலேயே கட்டிய கிணற்றையும் இந்த ஊரில் காணலாம்.
தேசிகன் பெருமாளை நாயகா நாயகி பாவத்தில் (பெருமாள் – நாயகன் தேசிகன் – நாயகி) அனுபவித்து வழிபட்டுள்ளார்.
தன் விக்ரத்தை தானே செய்து கொண்ட தேசிகரது விக்ரகம் இன்னும் இத்தலத்தில் உள்ளது.
யுகம் கண்ட பெருமாள் என்று போற்றப்படுகின்றார்.
சிறப்பம்சங்கள் :
கருடன் கொண்டு வந்த நதி #கருடநதி என்றழைக்கப்பட்டு அருகில் ஓடுகிறது. ரிஷியினுடைய சாபத்தால் இன்றும் இந்த நதியின் தீர்த்தம் மழைக்காலத்தில் ரத்தம் போல் சிவப்பாக ஓடுகிறது.
கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் வழியில் திருவகிந்திரபுரம் உள்ளது. பாண்டிச்சேரியிலிருந்து 25கி.மீ தூரத்துலும் 3கி.மீ தூரத்திலும் திருவகிந்திரபுரம் உள்ளது.
Share this:

Write a Reply or Comment

11 + 14 =