தேட வேண்டுமானால் ஓடு
Accenture நிறுவனத்தின் CEO
ஜூலி ஸ்வீட் அவர்களுடைய விரிவான பேட்டி ஒன்று
Harvard Business Review இதழில் வெளியாகியுள்ளது
அதில் வேலை தேடுவோரிடம் கண்டிப்பாக இருக்கவேண்டிய தாங்கள் எதிர்பார்க்கிற திறன் என்று அவர் திரும்பத் திரும்ப வலியுறுத்தி சொன்ன விஷயம்
புதியவற்றை விரைவாக
கற்கும் திறன்
இதைப் பரிசோதிப்பதற்காக
அவர் கல்லூரி மாணவர்களிடம் கேட்ட ஒரே கேள்வி
கடந்த 6 மாதத்தில் உங்களுடைய கல்லூரிப் பாடங்களுக்கு வெளியில் என்ன கற்றீர்கள்?
இந்தக் கேள்விக்கான பதில் தொழில்நுட்பம் சார்ந்த
ஒன்றாக இருக்கவேண்டும்
என்று அவசியம் இல்லை
வயலின் வாசிக்கக் கற்றேன் சமையல் செய்யக் கற்றேன்
தோட்டம் போடக் கற்றேன்
ஜப்பானிய மொழி பேசக் கற்றேன்
என்றுகூடச் சொல்லலாம்
எந்தக் கட்டாயமும்
இல்லாவிட்டாலும் எதையாவது கற்கவேண்டும் என்று எண்ணுகிற மனநிலைதான் முக்கியம்
அது நம் மற்ற (அலுவல்) வேலைகளில் பிரதிபலிக்கும் என்கிறார் ஜூலி
உண்மைதான்
இதுவும் ஒரு வகை தேடுதல் தான்
நாம் குழந்தைகளை பார்த்தோம் என்றால் இந்த உண்மை புரியும்
குழந்தைகள்
மாயாஜாலங்களை பார்க்கிறார்கள்
ஏனென்றால் அதற்கான
தேடுதல் அவர்களிடம் இருக்கிறது
தேடும் ஒருவனுக்கே
வெற்றியும் கிடைக்கும்
தோல்வியும் கிடைக்கும்
கூடவே
வெற்றி உலகத்தின் ஒரு
பக்கத்தை மட்டுமே காட்டும்
ஆனால் தோல்வி உலகத்தின்
முழு பக்கத்தையும் காட்டும்
என்கிற மிக சிறந்த
அனுபவமும் கிடைக்கும்
ஆகவே தயவு செய்து இனிமேலாவது தொடர்ந்து தேடிக் கொண்டே இருங்கள் துவண்டு போகும் வரை அல்ல வெற்றி கிடைக்கும் வரை
என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்