தேசிகநாதர் திருக்கோயில்:
இந்த பைரவரே இத்தலத்தின் பிரதான மூர்த்தியாவார். பக்தர்கள் முதலில் பைரவரை வழிபட்ட பின்பே, சிவன், அம்பாளை வணங்குகிறார்கள்.
இங்கு சிவன், அம்பாளுக்கு செய்யப்படும் கற்பூர ஆரத்தியை பக்தர்கள் கண்ணில் தொட்டு வைக்க அனுமதி கிடையாது. பைரவருக்கு ஆரத்தி எடுத்த கற்பூரத்தட்டையே பக்தர்களுக்கு காட்டுகிறார்கள்.
பைரவருக்கு முக்கியத்துவம் தரும் வகையில், இவ்வாறு செய்வதாக சொல்கிறார்கள். தேய்பிறை அஷ்டமியில் இங்கு சிறப்பு ஹோமம் நடக்கிறது. ஹோமம் முடிந்ததும் சுவாமிக்கு விசேஷ அபிஷேக, அர்ச்சனை நடந்து அதன்பின் பைரவர் உற்சவர் பிரகார உலா செல்கிறார்.
#பஞ்சமூர்த்தியில் ஒருவர்:
சிவன் கோயில்களில் விழாக்களின் போது, சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்திகளே பஞ்சமூர்த்திகளாக வீதியுலா செல்வர். ஆனால், இக்கோயிலில் நடக்கும் ஆனி உத்திர விழாவில் சண்டிகேஸ்வரருக்கு பதிலாக பைரவர் வீதியுலா செல்வது விசேஷம்.
பைரவர் தலம் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோஷ்டத்திலுள்ள யோக தட்சிணாமூர்த்தி சிம்ம மண்டபத்தில் காட்சி தருகிறார். இவரது தலையில் கிரீடம் அணிந்துள்ளது வித்தியாசமான அம்சம்.
#முதல்பூஜை சூரியனுக்கு:
தினமும் இக்கோயிலில் காலை பூஜையில் முதலில் சூரியனுக்கு பூஜை செய்யப்பட்டு, அதன்பின்பே பிற சுவாமிகளுக்கு பூஜை நடக்கிறது. சூரியன் இத்தலத்தில் தவமிருந்தவர் என்பதால், இவ்வாறு செய்வதாக சொல்கிறார்கள்.
சூரியனால் வழிபட்ட தலம் என்பதாலும், சூரியச்செடிகள் நிறைந்த வனமாக இருந்ததாலும் சூரியக்குடி எனப்பட்ட இத்தலம், பிற்காலத்தில் #சூரக்குடி என மருவியது.
நடராஜர், தெற்கு நோக்கி இருக்கிறார். சுவாமி சன்னதி எதிரிலுள்ள நந்தி, சிம்மங்கள் தாங்கும் மண்டபத்தில் உள்ளது. பைரவர் சன்னதியின் பின்புறம் பிரகாரத்தில் மற்றொரு பைரவர், கையில் கதாயுதத்துடன் காட்சி தருகிறார்.
#சிறப்பம்சங்கள்:
பொதுவாக பைரவர், கையில் சூலத்துடன் காட்சி தருவார். ஆனால் இங்குள்ள ஆனந்த பைரவர் சூலத்துக்குப் பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருவது சிறப்பு.
Share this: