April 27 2023 0Comment

தேசாந்திரியின் தனி பயணம்

தேசாந்திரியின் தனி பயணம்

 

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன்

தமிழ்நாட்டில் பழனிக்கு நிகராக மனிதனுக்கு ஏற்படும் நோய்களை குணமாக்கும் சக்தியை கொண்டவள் புன்னைநல்லூர் மாரியம்மன்

குடும்ப ஒற்றுமைக்கும்,
கண் பார்வை கோளாறுகளை
குறைப்பதற்கும்,
சரி செய்வதற்கும்
மிக சிறந்த கோவிலாக
தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை சொல்லலாம்..

இன்று (26/04/2023)
சூழ்நிலை அமைந்ததாலும்
மேலும் தாயாரும்
வாய்ப்பு கொடுத்ததாலும்
இரை தேடும் பயணத்திற்கு நடுவே
இறைத் தேடி பயணம் @ தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன்
இனிதே கை கூடியது

வாய்ப்பளித்த ஆண்டாளுக்கு நன்றி

தமிழ்நாட்டில் தவிர்க்கவே முடியாத, தவிர்க்கவே கூடாத தலையாய 20 கோயில்களில் ஒன்று தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டுகிறேன்…

தேசாந்திரியின்
தனி பயணம் தொடரும்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

12 + eleven =