April 20 2019 0Comment

தூவாய் நாதர் திருக்கோயில்: 

தூவாய் நாதர் திருக்கோயில்:
ஒரு முறை சுந்தரமூர்த்தி நாயனார் தனது இரண்டாவது துணைவியான #சங்கிலி நாச்சியாரிடம், நான் எப்போதும் உன்னை விட்டு பிரியமாட்டேன்,என்று உறுதி மொழி கொடுத்தார்.
திடீரென அவருக்கு முதல் துணைவியான பரவை நாச்சியார் நினைவுக்கு வந்தவுடன் திருவாரூர் புறப்படுகிறார்.
பரவை நாச்சியாருக்கு செய்து கொடுத்த உறுதி மொழியை மீறியதால் சுந்தரரின் பார்வை பறிபோனது. மனம் கலங்கிய #சுந்தரர் பார்வை வேண்டி ஒவ்வொரு சிவத்தலங்களாக சென்று, மீண்டும் பார்வை தந்தருளும்படி வேண்டினார்.
காஞ்சிபுரம் வந்தபோது காமாட்சியின் கருணையால் #ஏகாம்பரேஸ்வரர் சுந்தரருக்கு இடது கண் பார்வை மட்டும் தந்தருளினார்.
மீண்டும் அவர் பல சிவத்தலங்களை தரிசித்து திருவாரூர் வந்து மற்றொரு கண்ணுக்கு பார்வை தந்தருளும்படி வேண்டினார். இவரது வேண்டுதலை ஏற்ற இறைவன், இத்தலத்தில் அக்னி மூலையில் உள்ள குளத்தில் நீராடி தன்னை வணங்கினால் வலது கண் பார்வை கிடைக்கும், என்றருளினார். சுந்தரரும் அதன்படி செய்து வலது கண் பார்வை பெற்றார்.
இங்குள்ள அனைத்து விக்ரகங்களும் விஸ்வகர்மாவினால் செய்யப்பட்டது என்பர். கோயிலின் அக்னி மூலையில் குளம் அமைந்திருப்பது தனி சிறப்பாகும். சனிபகவான் தெற்கு பார்த்து அனுக்கிரக மூர்த்தியாக தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
சுந்தரருக்கு இங்கு கண் கிடைத்ததன் அடையாளமாக, இத்தலத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது அவரது திருமேனியில் கண் தடம் தெரிவதை காணலாம். ஒரு காலத்தில் இக்கோயில் கடலினுள் மண்கோயிலாக இருந்துள்ளது என தல வரலாறு கூறுகிறது.
#சிறப்பம்சங்கள் :
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். கோயிலின் அக்னி மூலையில் குளம் அமைந்திருப்பது தனி சிறப்பாகும்.
சுந்தரருக்கு இங்கு கண் கிடைத்ததன் அடையாளமாக, இத்தலத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது அவரது திருமேனியில் கண் தடம் தெரிவதை காணலாம். ஒரு காலத்தில் இக்கோயில் கடலினுள் மண்கோயிலாக இருந்துள்ளது என தல வரலாறு கூறுகிறது.
திருவாரூர் தியாகராஜர் கோயில் கீழரத வீதியில், தேருக்கு எதிரில் கோயில் அமைந்துள்ளது.
Share this:

Write a Reply or Comment

4 × 2 =