நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: –

தீர்மானம் – 1
நோன்பை வலியுறுத்தும் பண்பாடு நம் தமிழ் பண்பாடு. இதையொட்டி கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஒரு மண்டலம் கடும் பிரம்மச்சரிய விரதம் இருந்து தை மாதத்துடன் முடிக்கும் சபரிமலை விரதத்தையும், யாத்திரையையும் சீர்குலைக்கும் விதமாக எல்லா வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்கும் வகையில் சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது.
கோடான கோடி ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த தீர்ப்பை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அல்லது கேரள அரசு / மத்திய அரசு சபரிமலை கோயிலை டினாமினேஷன் டெம்பிளாக (Denomination Temple) அறிவித்து, ஆலயத்தின் பாரம்பரிய ஆகமத்தின் படியும், தேவப்பிரஸ்னத்தின் ஆணைக்கு இணங்க, திருப்பதி கோயிலை போல் தனிச்சட்டத்தின் கீழ் இயங்கும் முறையை செய்ய வேண்டும். நம் பண்பாடும் பாரம்பரியமும் காக்கப்பட வேண்டும்.
Share this: