திருவேங்கடநாதபுரம்:
தென் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமம்.
இக்கிராமம் திருநெல்வேலியிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு சுமார் 3000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இக்கிராமத்தில் புகழ் பெற்ற வெங்கடாசலபதி கோவில் உள்ளது. இதன் காரணமாக இவ்வூர் ‘தென் திருப்பதி’ என்றும் அழைக்கப்படுகிறது.
புராண வரலாறு :
முன்னொரு காலத்தில் இந்தப் பகுதியை ஆண்ட பாண்டிய மன்னனின் கனவில் தோண்றிய இறைவன் தனக்கு இவ்விடத்தில் கோவில் அமைத்து வழிபட்டு வந்தால் உனது குறைகளை போக்குவேன் என்றார். அதன்படி மன்னன் இவ்விடத்தில் கோவில் கட்டி இறைவழிபாடு செய்து நல்லாட்சி செய்து வந்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இக்கிராமத்தைப் பூர்வகுடியாகக் கொண்ட ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் என்பவர் ஐக்கிய அமெரிக்காவில் நீதிபதியாக உள்ளார்.
இப்பகுதியில் வேளாண்மைத் தொழிலே முக்கியத் தொழிலாக விளங்கி வருகிறது.
தாமிரபரணி ஆறு இக்கிராமத்தை வளமைப்படுத்தி வருகிறது.