தேவாதிராஜன் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தில்தேரழுந்தூரில் அமைந்துள்ள 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்று.

புராண பெயர்:திருவழுந்தூர்
கோயில் தகவல்கள்:
மூலவர்:தேவாதிராஜன்
உற்சவர்:ஆமருவியப்பன்
தாயார்:செங்கமலவல்லி
தீர்த்தம்:தர்சன புஷ்கரிணி, காவிரி
மங்களாசாசனம்
பாடல் வகை:
நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
திருமங்கையாழ்வார்
விமானம்:கருட விமானம்
கல்வெட்டுகள்:உண்டு
சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி உயர மூலவர் கொண்ட திருத்தலம்.திருமணத் தடை நீக்கும் திருத்தலமாகக் கூறப்படுகின்றது.
தலவரலாறு:
பெருமாளும் சிவபெருமானும் சொக்கட்டான் ஆடிய போது பார்வதிதேவியை நடுவராக நியமித்ததில், காய் உருட்டும் போது சகோதரனான பெருமாளுக்கு சாதகமாகக் கூற, சிவபெருமான் பார்வதி தேவியைப் பசுவாக மாற சாபமிட, அவருக்கு துணையாக சரஸ்வதி தேவியும் லட்சுமி தேவியும் பசுவாகி பூமிக்கு வந்த போது மேய்ப்பவராக பெருமாள் ’ஆ’மருவியப்பன் எனும் பெயரில் வந்த திருத்தலம்.
சிறப்பு:
மார்க்கண்டேய முனிவர் வழிபட்ட திருத்தலம். மூலஸ்தானத்தில் பெருமாளுடன் பிரகலாதனும் மார்க்கண்டேய முனிவரும் உள்ளனர்.
Share this: