August 24 2024 0Comment

திருமீயச்சூர் ஶ்ரீ லலிதாம்பிகை கோவிலின் வெள்ளி தேர் திருப்பணி

திருமீயச்சூர் ஶ்ரீ லலிதாம்பிகை கோவிலின் வெள்ளி தேர் திருப்பணி

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில்,திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோவில், திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவில், திருக்கண்ணபுரம் ராம நந்தீஸ்வரர் கோவில், திருச்செங்காட்டாங்குடி உத்திராபதிஸ்வரர் கோவில்
உள்ளிட்ட மிக முக்கிய கோயில்களை நிர்வகிக்கக்கூடிய பெரும்பேறு படைத்த திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் 18-வது குரு மகா சன்னிதானத்தை இன்று திருப்புகலுரில் உள்ள அவருடைய திருமாளிகையில் நேரில் சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது.
ஆதீனத்தின் அறிவுறுத்தலின்படி,
திருமீயச்சூர் ஶ்ரீ லலிதாம்பிகை கோவிலின் வெள்ளி தேர் திருப்பணிக்காக 300 Kg – வெள்ளி திரட்டி கொடுக்கும் பணி இன்றிலிருந்து ஆரம்பம் என உறுதி அளித்துள்ளேன்.
இந்தப் பணியை சிறப்பாக செய்வதற்காக ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் துணைப் பொருளாளர்
திரு. மலர் பாஸ்கர்
Phone No: 7200569569
அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை இதன் மூலமாக தெரிவித்துக் கொள்கின்றேன்.
சுத்தமான வெள்ளியை நீங்கள் திரு பாஸ்கர் வசம் ஒப்படைக்கும் போது அவர் அதை கோவிலில் ஒப்படைத்து அதற்கான ரசீதை வாங்கி உங்களுக்கு அளித்து விடுவார் என உறுதி அளிக்கின்றேன்.
வாழ்க வளமுடன்
நன்றி ஆண்டாளுக்கு. .
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

eleven + 14 =