திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்:
முருகப்பெருமான் சூரபத்மன் முதலிய அரக்கர்களை அழிக்க போர் செய்த போது, தப்பிப் பிழைத்த மாக்கிரகன் என்ற அசுரன் சிவபூஜை செய்து வந்தான்.
அவன் இத்தலம் வந்த போது இங்குள்ள இறைவனுக்கு தன் பெயரால் மாக்கிரன் என பெயர் சூட்டினான். இப்பெயர் மருவி மாகறலீசர் என்று மாறியது.
அழகிய சுதை சிற்பங்களோடு 5 நிலை ராஜகோபுரமும், இரண்டு பிரகாரமும் உள்ளது.
பிரகாரத்தில் கணபதி, ஆறுமுகன், அறுபத்து மூவர், நடராஜர், பைரவர், நவக்கிரக சன்னதி உள்ளது. விமானத்தில் வீணை ஏந்திய தெட்சிணாமூர்த்தியைக் காணலாம்.
#சிறப்பம்சங்கள் :
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
காஞ்சிபுரத்திலிருந்து 16கி.மீ தூரத்திலுள்ள இவ்வூருக்கு, கீழ்ரோடு வழியாக உத்திரபேரூர் செல்லும் பஸ்களில் செல்ல வேண்டும்.
Share this: