December 28 2020 0Comment

திருப்பாவை பாடல் 9:

#திருப்பாவை

#பாடல் 9:

(நாமம் நவில்வோம் எனல்) தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும் மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய் மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான் ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ? ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ? மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

விளக்கம் :

எழிலும், தூய்மையும் கொண்ட மணிகளால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிலும் விளக்குகள் பிரகாசமாக ஒளிவிட, நறுமணம் நிறைந்த சந்தனம் அகில் தூபம் கமழ, கண்டவுடன் அதில் படுத்து உறங்கும் சிந்தனையை உருவாகும் அழகிய மென்மையான பஞ்சு மெத்தையில் துயில் கொண்டு இருக்கும் எங்கள் மாமன் மகளே! மணிகள் யாவும் நிறைந்த உன் வீட்டின் மணிக்கதவை திறப்பாயாக… எங்கள் அன்பு மாமியே! உன் மகளை எழுப்புவாயாக… நாங்கள் பல மணி நேரமாக கூவி அழைக்கிறோம். அவள் எதுவும் உரைக்கவில்லையே அவள் ஊமையா? செவிடா? சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா? அல்லது மகிழ்ச்சியான பெருந்தூக்கம் எழ முடியாதபடி ஏதாவது மந்திரம் செய்து அவளை மயக்கிவிட்டதோ? அவளை உடனே எழுப்புங்கள். அந்த மாதவன், வைகுந்தனின் நாமத்தையும், அந்த நாராயணனின் திருநாமங்களை சொல்லியும் பயன் பெறுவோமாக என்று எழுப்புகிறாள் ஆண்டாள்.

Source:web

Share this:

Write a Reply or Comment

five − four =