திருப்பாவை பாடல் 19:
(கண்ணனை எழுப்பி அனுப்புக எனல்) குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய் மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண் எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால் தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.
விளக்கம் :
மங்களகரமாக குத்து விளக்கு ஒளிவீச, யானை தந்தத்தினால் செய்யப்பட்ட கால்களைக் கொண்ட கட்டிலின் மேல், மென்மையான பஞ்சு மெத்தை விரித்திருக்க அதில் கொத்துக் கொத்தாக மலர்களை தலையில் சூடிய நப்பின்னையை அணைத்தபடி படுத்திருக்கும் பரந்த மார்பை உடையவனே! நீ எங்களுடன் பேசுவாயாக… மை பூசிய கண்களை உடையவளே! நீ உன் மணாளனை ஒருபொழுதும் பிரியவிடமாட்டாய். லோகமாதாவான உனக்கு இது ஏற்கத்தக்கதன்று.
Source:web
Share this: