January 04 2021 0Comment

திருப்பாவை பாடல் 18:

திருப்பாவை பாடல் 18:

(நப்பின்னையை எழுப்புதல்)

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய் கந்தம் கமழும் குழலி கடை திறவாய் வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண் பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம் :

மதங்கொண்ட யானையின் வலிமையை உடையவரும், போர்க்களத்தில் புறமுதுகு காட்டி ஓடாமல் வலிமையை உடையவரான நந்தகோபரின் மருமகளே… நப்பின்னையே மணம் வீசும் கூந்தலை உடையவளே… கதவைத்திற. எல்லா இடங்களிலும் கோழிகள் கூவி அழைக்கின்றன. மாதவிக் கொடி படர்ந்த பந்தலின் மேல் குயில்கள் கூட்டமாக வந்து பலமுறை கூவுகின்றன. கண்ணனோடு வந்து விளையாடி, வெற்றிபெற்ற கையில் பந்தை வைத்துக்கொண்டிருப்பவளே! உன் கணவரின் புகழைப் பாட கையில் அணிந்திருக்கும் வளையல்கள் ஒலிக்க மகிழ்ச்சியோடு வந்து கதவு திறப்பாயாக…!

Source:web

Share this:

Write a Reply or Comment

17 − fourteen =