January 01 2021 0Comment

திருப்பாவை பாடல் 16:

திருப்பாவை பாடல் 16:

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.

விளக்கம் :

எங்களுடைய தலைவனாக இருக்கும் நந்தகோபனின் அரண்மனையைக் காவல் செய்பவனே! கொடிகளும் தோரணங்களால் கட்டப்பட்ட வாசல் காவலனே! நெடுங்கதவை திறப்பாயாக…!! மாயன் மணிவண்ணன் ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக நேற்றே பரிசிலாகப் பறை தருவதாக சொல்லியிருக்கிறான். அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். அதெல்லாம் முடியாது என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாமல், மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக.

Share this:

Write a Reply or Comment

15 − nine =