December 25 2020 0Comment

திருப்பாவை : பாடல் – 08

திருப்பாவை : பாடல் – 08

(இறையருள்) கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பொருள் :

கருமையான கிழக்கு வானமானது வெளுத்து விட்டது. எதிலும் நிதானமாகவும், மந்தமாகவும் நடக்கும் எருமைகள் கூட எழுந்து புல் நிறைந்த மேய்ச்சல் நிலத்தை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கின்றன. அழகிய பெண்ணே! நீ துயில் கொண்டு இருப்பது முறையா? நீ எங்களுடன் வரவேண்டும் என்பதற்காக மற்றவர்களையும் தடுத்து நிறுத்தி உன்னை அழைத்து செல்லலாம் என்று வந்து நிற்கின்றோம். அவர்களின் மனதை கடுக்க வைக்காமல் வேகமாய் துயில் எழுந்து வா…! தன்னுடைய தாய்மாமனான கம்சன் ஏவிய பல அசுரனின் வாயை பிளந்து கொன்று, பல துர்ச்செயல்கள் செய்து வந்த மற்போர் செய்யும் வீரர்களையும் துவம்சம் செய்தவன் கண்ணபிரான். தேவர்களுக்கு முதற்கடவுளான நாராயணனின் புகழை பாடியபடி கோவிலுக்கு சென்று வழிபடுவோம். அவருடைய அருள் கிடைத்தால் நம்மை குற்றமும், பாவமும் செய்ய வைக்கும் ஆசை அசுரனை, மமதை மல்லனை நாமே கொன்றுவிடலாம் என்று குறிப்பிடுகிறாள் ஆண்டாள்.

Source:web 

Share this:

Write a Reply or Comment

2 × 3 =