October 16 2019 0Comment

திருப்பதி

திருப்பதி இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவ தலமாகும்.
இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் இது ஒன்று. இங்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது.
இந்த பகுதியில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுள்ள திருமலையும், அருள்மிகு பத்மாவதி தாயார் கோயில் கொண்டுள்ள திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும் பொதுவில் திருப்பதி என்றே பக்தர்களால் போற்றப்படுகிறது.
திருமலை மேல்திருப்பதி என்றும் மற்றது கீழ் திருப்பதியெனவும் குறிப்பிடப்படுகிறது.
#சொல் இலக்கணம் :
திருப்பதி என்ற சொல் திரு+பதி என்று பிரிக்கப்படுகிறது. வடமொழி சொல்லான பதி என்பதற்கு கணவன் (தலைவன்) என்று பொருளுண்டு, தமிழ் சொல்லான திரு என்பதற்கு புண்ணியம், தெய்வத்தன்மைவாய்ந்த, மேன்மைமிக்க என பல பொருள்கள் உண்டு.
திருப்படி என்பதே மருவி திருப்பதி ஆகியுள்ளதாகவும் கருதப்படுகிறது. திருமலை ஏழு மலைகள் என்றும் அழைக்கப்படுகிறது. (இது தெலுங்கில் ஏடு-கொண்டலு என்றும் தமிழில் ஏழுமலை என்றும் அழைக்கப்படுகிறது.
ஏழு சிகரங்களைக் கொண்ட மலைகளில் திருமலை உள்ளது. இது ஆதிசேசனின் ஏழு தலைகளை குறித்து வருவதால் இந்த மலைக்கு சேசாசலம் என்று பெயர் உள்ளது. சேசாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ரிசபத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழும் இந்த மலை சிகரங்களின் பெயர்களாகும்.
வரலாறு :
இதனையும் பார்க்க: வேங்கடம்
உலகிலேயே பழைமையும், பெருமையும் வாய்ந்த பாறை மலைகளில் இரண்டாம் இடம் வகிக்கும் மலைகள் இந்த திருமலை மலைகள் தான்.
திருப்பதியின் பழைய பெயரான திருவேங்கடத்தை கி.மு.400-100 இல் எழுதப்பட்ட தமிழ் சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரமும், சாத்தனாரின் மணிமேகலையும் குறிப்பிட்டுள்ளன.
இந்த மலைகளை பண்டைய தமிழகத்தின் வடபுறத்து எல்லையாக சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வெங்கடேஸ்வரா ஆலயம் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும் இது பல பேரரசுகளால் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது.
முதன்முதலில் இக்கோவில் கருணாகரத் தொண்டைமான் கருணாகரத் தொண்டைமானின் [[சிலை எழுபது|(68-சிலையெழுபது (கம்பர் )]]என்ற பல்லவ மன்னரால் ஆக்கம் பெற்றது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் பல்லவ, கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை சோழ, கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் விசயநகர இந்த கோவில் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது.
விசய நகர பேரரசின் மிகப்பெரிய மன்னரான ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், இந்த கோவிலுக்காக தங்கமும் மற்ற விலை உயர்ந்த ஆபரணங்களையும் நன்கொடையாக தந்துள்ளார்.
இந்தக் கோவிலுடன் ஒட்டி நிறைய கோவில்களையும் கட்டியுள்ளார். திருப்பதியில் இருந்து சில கி.மீ.கள் தொலைவில் தென் மேற்கு புறம் தள்ளி இருக்கும் சந்திரகிரி என்னும் கிராமம் விஜயநகர சக்கரவர்த்தியின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியது.
வைணவம் பெரிதாக பின்பற்றப்பட்ட கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் திருப்பதி, ஆழ்வார்களால்(வைணவ முனிவர்கள்) கலியுக வைகுண்டம் என்று போற்றப்பட்டது. பக்தி இயக்கத்தைச் சேர்ந்த ஆழ்வார்கள் திராவிட பூமியில், வெங்கடேஸ்வரர் மீது அவர்கள் இயற்றிய பாடல்களுக்காகவும், இலக்கியங்களுக்காகவும் பெயர் போனவர்கள்.
வைணவ சம்பிரதாயத்தில்திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக விளங்குவது திருப்பதி ஆலயம். பதினோராம் நூற்றாண்டில் இந்தக் கோவிலின் ஆச்சார அனுஷ்டானங்கள் இராமானுஜ ஆச்சார்யரால் முறையாக்கப்பட்டன.
மதுரை மீனாட்சியம்மன் கோவில், அரங்கநாதசுவாமி கோவில் ஆகியவை இசுலாமியர்களால் சூறையாடப்பட்டபோது தென்னிந்தியாவில் தப்பி இருந்த இடம் திருப்பதி மட்டும்தான்.
இந்த இசுலாமிய பிரவேசங்களின் பொழுது திருவரங்கத்தில் இருந்த திருவரங்கர் திரு உருவச் சிலை திருப்பதிக்கு கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்த நிகழ்வை குறிப்பதற்காக கட்டப்பட்ட ரங்கநாத மண்டபம் இன்றும் திருப்பதியில் இருக்கிறது. இசுலாமியர்களிடமிருந்து திருமலை கோயில் தப்பியதற்கு சுவாரசியமான வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது.
அந்த முகலாயப்படையினர் மலையின்மேல் என்ன கோயில் இருக்கிறது என்று கேட்டபோது அவர்களின் நோக்கத்தையும் பழக்க வழக்கங்களையும் நன்கறிந்த உள்ளூர் மக்கள் பன்றிக் கடவுளின் கோயில் என்றனராம்.
மக்கள் குறிப்பிட்டது வராஹப் பெருமாளின் திருக்கோயிலை. இந்தப் பெருமாளை தரிசித்தப்பின்னர்தான் ஏழுமலையானை தரிசிக்கவேண்டும் என்கிற சம்பிரதாயம் இருக்கிறது.
பன்றிகளின் மீது முகலாயர்களுக்கு இருக்கும் வெறுப்பால் அவர்கள் திருமலைக்கு செல்லும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டனர் என்று சொல்லப்படுகிறது.
#பிரம்மோற்சவம்:
திருப்பதி பிரம்மோற்சவம் புகழ் பெற்ற கோவில் திருவிழாவாகும். பங்குனி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி கணக்கில் கொண்டு இந்த திருவிழா நடத்தப்படுகிறது. சில தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பும் செய்கின்றன.
திருமலைக் கோவிலில் தினமும் அதிகாலையில் ‘ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம்’ (திருப்பள்ளி எழுச்சி) ஒலிபரப்பினாலும், மார்கழி மாதத்தில் மட்டும் தமிழ் திருப்பல்லாண்டு மற்றும் திருப்பாவை பாசுரங்களை ஒலிபரப்புகிறார்கள்.
Share this:

Write a Reply or Comment

nineteen − 15 =