April 16 2019 0Comment

திருத்தளிநாதர் திருக்கோயில்: 

திருத்தளிநாதர் திருக்கோயில்:
சிவ பக்தனான இரண்யாட்சகனுக்கு அந்தகாசுரன், சம்பாசுரன் என இரண்டு மகன்கள் பிறந்தனர். இவர்கள் சிறந்த சிவபக்தர்களாக இருந்தாலும், தேவர்களுக்கு பெரும் துன்பம் கொடுத்தனர்.
தேவர்கள் சிவபெருமானை துதித்தனர். சிவன் தனது அம்சமாக விஸ்வரூபம் எடுத்து வந்தார். அந்தகாசுரன், சம்பகாசுரனை வதம் செய்தார். இவரே பைரவர் ஆவார்.
அசுரர்கள் என்றாலும் அவர்கள் பக்தர்கள் என்பதால் பைரவருக்கு தோஷம் பிடித்தது.
தோஷம் நீங்க இங்கு சிவலிங்க பூஜை செய்தார். இவரே இத்தலத்தில் யோகபைரவராக காட்சி தருகிறார்.
இவர் வலக்கரத்தில் சிவலிங்கத்தை வைத்து, கால்கட்டை விரலை தரையில் ஊன்றியபடி யோகநிலையில் காட்சி தருகிறார். இவருக்கு வெண்ணிற பட்டாடை அணிவித்து அலங்கரிப்பது விசேஷம்.
யோக நிலையில் இருப்பதால் இவருக்கு நாய் வாகனம் கிடையாது. கிரக தோஷங்கள் நீங்க நவக்கிரக தலங்களுக்கு செல்ல முடியாவிட்டால், இங்குள்ள யோக பைரவரை வணங்கினால் போதும்.
தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு வாசனைப் பொருட்கள் வைத்து வழிபடுகிறார்கள். சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று, இவருக்கு ஒரு நாள் விழா நடக்கிறது. அப்போது பைரவர் உற்சவர் குதிரை வாகனத்தில் புறப்பாடாகிறார்.
கார்த்திகையில் #சம்பகசஷ்டி விழாவின்போது ஆறு நாட்கள், அஷ்டபைரவ யாகம் நடக்கிறது. இந்த யாகம் மிகவும் விசேஷமானது.
சிறப்பம்சங்கள்:
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
மதுரையில் இருந்து 60 கி.மி.தூரத்தில் உள்ளது.
Share this:

Write a Reply or Comment

12 + 17 =