December 26 2017 0Comment

திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள்:

திருக்கூடலூர் என்ற திவ்ய தேசம் திருவையாறிலிருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள வைணவத் திருத்தலம். இது ஆடுதுறைப் பெருமாள் கோயில் மற்றும் சங்கம ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.
புராண பெயர்(கள்): திருக்கூடலூர், வட திருக்கூடலூர் #ஆடுதுறைப் பெருமாள் கோயில், சங்கம ஷேத்திரம்
பெயர்: ஆடுதுறைப் பெருமாள் கோயில் (திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள் திருக்கோயில்)
ஊர்: திருக்கூடலூர்
மாவட்டம்: தஞ்சாவூர்
மூலவர்: வையம் காத்த பெருமாள் (ஜகத்ரட்சக பெருமாள்)
உற்சவர்: வையம் காத்த பெருமாள்
தாயார்: பத்மாசினி தாயார் (புஷ்பவல்லி தாயார்)
உற்சவர் தாயார்: புஷ்பவல்லி தாயார்
தீர்த்தம்: சக்ர தீர்த்தம்
பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்: திருமங்கையாழ்வார்
விமானம்: சுத்தஸத்வ விமானம்
கல்வெட்டுகள்: உண்டு
கோயிலில், வரதராஜப் பெருமாள், ஆண்டாள் மற்றும் ஆழ்வார்களுக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. கோயிலுக்கு முன்னே உள்ள அழகான ராஜகோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது. கோயிலுக்கு உள்ளே இருக்கும் ஒரு மண்டபத்து தூண்களில் ராணி மங்கம்மா மற்றும் அவரது அமைச்சர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். நாலு கால பூஜை மரபு. வருடாந்திர பிரம்மோத்சவம் வைகாசித் திங்களில் விமரிசையாக நடைபெறுகிறது.
மூலவர் தரிசனம் :
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் மூலவர், வையம் காத்த பெருமாள், உய்யவந்தார் மற்றும் ஜகத்ரட்சகன் என்று அழைக்கப்படுகிறார். கையில் செங்கோல் ஏந்தி காட்சி தரும் உற்சவருக்கும் அதே பெயர் தான். தாயாரின் திருநாமங்கள் பத்மாசினி மற்றும் புஷ்பவல்லி ஆகும்.
#உத்சவ மூர்த்தி :
ஒரு முறை, நந்தக முனியும், தேவர்களும் இங்கு ஒன்று கூடி ஹிரண்யாக்ஷனின் கொடுமையிலிருந்து பூவுலகைக் காக்குமாறு, மகாவிஷ்ணுவை வணங்கித் தொழுத காரணத்தால், இந்த புண்ணியத் தலம் திருக்கூடலூர் என்ற பெயர் பெற்றது என்று தல புராணம் கூறுகிறது.
#மணவாள மாமுனிகள் :
காவிரி, இவ்விடத்தில் திருமாலை வணங்கி, பாப விமோசனம் பெற்று, இழந்த பொலிவை திரும்ப அடைந்ததாக ஓர் ஐதீகம் உண்டு. அம்பரீசன், திருமங்கையாழ்வார், பிரம்மன், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியோர் பெருமாளின் தரிசனம் பெற்று, அவரை வழிபட்ட புண்ணியத் தலமிது.
நாலாயிரத்திவ்ய பிரபந்தம்‎ – பெரிய
இவ்வைணவ திருப்பதியை திருமங்கையாழ்வார், அவர் அருளிச் செய்த பெரிய திருமொழியில் உள்ள பத்து திருப்பாசுரங்களில் (1358-67) மங்களாசாசனம் செய்துள்ளார்.
#போக்குவரத்து :
இந்த கோயிலுக்கு தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது. ஆறு கிமீ தொலைவில் அய்யம்பேட்டை ரயில் நிலையம் அமைந்துள்ளது.
Share this:

Write a Reply or Comment

2 × four =