September 30 2018 0Comment

திருஅரிமேய விண்ணகரம்:

திருஅரிமேய விண்ணகரம்:

 

அல்லது குடமாடு கூத்தன் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். 

#திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழிக்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் திருநாங்கூரில் அமைந்துள்ளது.

#கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆடிய இறைவன் என்பதால் குடமாடு கூத்தன் என்ற பெயர். உதங்க முனிவர் இறைவனைக் குறித்து தவம் புரிந்து, கோபால கண்ணனாக இத்தலத்தில் பெருமாளைத் தரிசித்ததாக ஒரு வரலாறும் உண்டு. 

தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் நடைபெறும் கருடசேவைக்கு இவரும் எழுந்தருள்வார். திருமங்கையாழ்வார் இத்தலத்தினை 10 பாக்களில் பாடியுள்ளார்.

மூலவர் : குடமாடு கூத்தன் (தைலக் காப்புத் திருமேனி)

உத்ஸவர் : சதுர்புஜங்களுடன் கோபாலன்.

தாயார் : அம்ருதகட வல்லி

தீர்த்தம் : கோடி தீர்த்தம், அம்ருத தீர்த்தம்

விமானம் : உச்சச்ருங்க விமானம்

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்

#திருத்தலச் சிறப்புகள் : 

குடமாடு கூத்தர் என்பது இப்பெருமானின் திருநாமம். குடங்கள் எடுத்து ஆடினானா அல்லது குடை கொண்டு ஆடினானா என்றொரு மயக்கு இந்தக் குடக்கூத்து என்றாகிறது. 

#திருவில்லிபுத்தூர் ஆண்டாளோ குன்றம் குடையாய் எடுத்தாய்க் குணம் போற்றி என்று குன்றத்தைக் குடை பிடித்ததாகக் கூறுகிறார். இத்தலத்தில் குன்றைக் குடையாக எடுத்த கோவர்த்தன நாதனே இங்கு எழுந்தருளியிருக்கிறார். வீற்றிருந்த திருக்கோலம்  கிழக்கே திருமுக மண்டலம்

குன்றத்தை குடையாய்க் கொண்டு காப்பது அவன் வாத்ஸல்யம் பகைவனுக்கு அருளுடம் பண்பின்னாக இங்கு எழுந்தருளியுள்ளான். 

குடங்கள் எடுத்து ஆடுபவன் என்று குடையாகக் குன்றத்தை எடுத்து கோபலர்களையும் ஆவினங்களையும் காத்தருளின கோவர்த்தன நாதனே இங்கு எழுந்தருளியுள்ள 11 பெருமான்களுள் ஒருவராக இருப்பதால் அந்த கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்த நிகழ்ச்சியே இங்கு மறைமுகமாக உணர்த்தப் பட்டுள்ளதாகக் கொள்ளலாம். திருநாங்கூர் கருடசேவையில் குடமாடு கூத்தனும் கலந்து கொள்வார்.

இங்கு கீழவீதியில் மதங்கீசுவரர் கோயில் உள்ளது. மேலும் சீர்காழியிலிருந்து பஸ் வசதியும் உண்டு.

Share this:

Write a Reply or Comment

twenty − twenty =