August 03 2018 0Comment

தாருகாவனேஸ்வரர் கோயில்

தாருகாவனேஸ்வரர் கோயில் :
அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் குளித்தலை வட்டத்தில் உள்ள திருப்பராய்த்துறை கிராமத்தில் அமைந்துள்ளது. இறைவன் பிட்சாடனராய் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்கட்கு அருள்புரிந்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள மூன்றாவது சிவத்தலமாகும்.
கோயில் தகவல்கள்:
மூலவர்:பராய்த்துறைநாதர், தாருகாவனேஸ்வரர்
உற்சவர்:பராய்த்துறைப் பரமேஸ்வரன்
தாயார்:பசும்பொன் மயிலாம்பிகை
உற்சவர் தாயார்:ஹேமவர்ணாம்பாள்
தல விருட்சம்:பராய் மரம்
தீர்த்தம்:அகண்ட காவேரி
ஆகமம்:சிவாமம்
பாடல் வகை:தேவாரம்
தல வரலாறு :
பராய் மரக்காட்டில் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இத்தலம் ‘பராய்த்துறை’ எனப்படுகிறது.
இத்தலத்திற்கு ‘தாருகாவனம்’ என்றும் பெயருண்டு. பராய் மரம் சமஸ்கிருதத்தில் ‘தாருகா விருக்ஷம்’ எனப்படுகிறது.இறைவன் பிட்சாடனராய்ச் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்கட்கு அருள்புரிந்தார்.
சிறப்புக்கள் :
இக் கோவிலுள்ள நவகிரகங்களுள் சனிபகவானுக்கு மட்டுமே வாகனம் உள்ளது, ஏனையோருக்கு வாகனமில்லை.முதற் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டது இத்திருக்கோயில்.
இக்கோவிலின் கல்வெட்டில் இத்தலம், “உத்தம சீவிச் சதுர்வேதிமங்கலத்துத் திருப்பராய்த்துறை” என்றும்; இறைவன் பெயர் “பராய்த்துறை மகாதேவர் ” என்றும்; “பராய்த்துறைப் பரமேஸ்வரன்” என்றும் குறிக்கப்படுகிறது.
Share this:

Write a Reply or Comment

18 − fourteen =