உலகத்துக்கே படி அளக்க கூடிய லோகமாதாவான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார்க்குஅனுதினமும்பல படிக்கணக்கில் நைவேத்தியம் நடத்த வேண்டிய இடத்தில் 1990 – 1991 ம் ஆண்டு முதல் விவசாயம் இல்லாததை காரணம் காட்டி அன்றிலிருந்து இன்று வரை வெறும் 400 gm அரிசி மட்டுமே வழங்கி நைவேத்தியம் படைக்கப் பட்டு வருகிறது.
இந்த விஷயம் சம்பந்தமாக, இதை சரி செய்யும் நோக்கத்தில் ஆண்டாள் வாஸ்து குழுமம் தமிழக அரசுக்கு முறையிட முடிவு செய்து,
பாசமிகு அண்ணன் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தமிழ்நாடு மாநில தலைவர் திரு.சேலம் இளங்கோவன்,
பாசமிகு அன்பு அண்ணன் முன்னாள் அமைச்சர் திருவண்ணாமலை திரு.அக்ரி கிருஷ்ணமூர்த்தி
மற்றும்
எங்கள் குடும்பத்தின் மூத்த சகோதரர் திரு.லட்சுமி நாராயணன்
மூலமாக தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டதில் உடனடியாக இந்த விஷயத்தை சரி செய்யும் வகையில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிசாமி அவர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியாருக்கு தேவையான அனைத்து நைவேத்திய மற்றும் கைங்கரிய பொருட்களும் 1991க்கு முன் என்ன நிலை இருந்ததோ அதன்படியே வழங்க உத்தரவு பிறப்பித்து விட்டார் என்பதை இதன் மூலம் அன்புடன் தெரிவித்து கொள்கின்றேன்.
இந்த நல்ல செயலை செய்த தமிழக அரசுக்கு கோடான கோடி ஆண்டாள் பக்தர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்ளும்விதமாக எங்கள் ஆண்டாள் வாஸ்து குழுமம் சார்பாக நான் மற்றும் என்னுடைய அருமை தம்பிகள் செந்தூர் சுப்பிரமணியன் மற்றும் மல்லசமுத்திரம் சங்கர் இன்று தமிழக முதல்வரை அவரின் சென்னை இல்லத்தில் சந்தித்து நன்றி சொன்னபோது எடுத்த படங்கள்…
முதல்வர் இல்லத்தில் எங்களுடைய வாகனம் எந்தவித சோதனையும் இல்லாமல், எங்களுக்கும் எந்தவித சோதனையும் இல்லாமல் ஒரு நொடியும் காக்க விடாமல் எங்களை அவர்கள் நடத்திய விதம் பிரமிப்புக்குரிய ஒரு விஷயம் மற்றும் எங்கள் ஆண்டாள் வாஸ்து குழுவுக்கான அங்கீகாரம் ஆகும்.
இது அத்தனையும் ஆண்டாளால் மட்டுமே சாத்தியமானது.
சாத்தியமாக்கிய ஆண்டாளுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி.சொக்கலிங்கம்