November 19 2021 0Comment

தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் உடன் ஒரு சந்திப்பு

தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் உடன் ஒரு சந்திப்பு

இன்று (19 11 2021)
இந்து அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் மாண்புமிகு அமைச்சர்
பிகே சேகர்பாபு அவர்களை
VHP தென் பாரத அமைப்புச் செயலாளர் திரு PM நாகராஜன் அவர்களும் நானும் சந்தித்து 40 நிமிடங்கள் வரை உரையாடினோம்.
சந்திப்பின் மைய நோக்கமே தமிழக அரசின் அறநிலையத்துறை அமைச்சரை மரியாதை நிமித்தமாக
சந்திப்பது தான் என்றாலும் ஆக்கப்பூர்வமான கருத்து பரிமாற்றங்கள் நிறைந்த கலந்துரையாடலாக அமைந்து போனது இந்த சந்திப்பு.
நல்ல ஆலோசனைகளை தான் உளமார வரவேற்பதாக சொன்ன அமைச்சர் சொன்னதுடன் நின்று விடாமல் சுற்றி அமர்ந்திருந்த அதிகாரிகளுக்கு உடனடியாக அடுத்த JCக்கள் கூட்டத்தில்
VHP க்கு பதினைந்து நிமிடம் நேரம் ஒதுக்கி தர வேண்டும் என்றும் கோவில் சார்ந்த இவர்களுடைய கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் அதை உடனடியாக பரிசீலிக்கும்படியும் உத்தரவிட்டார்
நல்லது நடக்கும் என்கின்ற மிகப்பெரிய நம்பிக்கையுடன் அமைச்சரின் புயல்வேக செயல்பாட்டுக்கும் பாராட்டு தெரிவித்து விட்டு திருப்தியுடன் அங்கிருந்து விடைபெற்றோம்.
அமைச்சர் என்னிடம் சொன்ன விஷயத்திற்காக இந்த இடத்தில் நம் ஆண்டாளுக்கு ஒரு பிரத்தியேகமான மனமார்ந்த நன்றியை நான் தெரிவிக்க வேண்டும்….
அவர் அறைக்குள் நான் நுழைந்தவுடன் அவர் சொன்னது
சொக்கு
ஆண்டாளம்மா என்ன சொல்றாங்க?!
நீங்க சொல்லித்தான் நான் ஆண்டாள் கோவிலுக்கு முதல் தடவை போனேன்.சரியா!!!!
சரியாக 16 வருடத்திற்கு முன் நான் அவரிடம் சொன்னதை
இன்று ஞாபகம் வைத்து அத்தனை அதிகாரிகளின் முன்னிலையில் சொன்னபோது மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டேன்
காரணம்
இடது
வலது
மேல்
கீழ்
என எப்படி நான் சென்றாலும்
எப்படி நான் இருந்தாலும்
என் அடையாளம் எப்பொழுதும் ஆண்டாள் எனும் போது
இந்த நிறைவு ஒன்றே போதும்
நான் உயிர்ப்போடு இருக்க…
எல்லா புகழும் ஆண்டாளுக்கே
என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்
May be an image of 3 people, people standing and indoorMay be an image of 3 people, people standing and indoor
Share this:

Write a Reply or Comment

four × 1 =