தண்ணீர் சிறகுகள் 14
இன்று காலை கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பக்கம் என் நண்பர் ஒருவரை பார்க்க செல்ல வேண்டியிருந்தது. அவ்வாறு போகும்போது தான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது
வருத்தம் என்னவென்றால் அந்த இடத்தில் உள்ளவர்கள் அத்தனை பேரும் படித்து தான் இருக்க முடியும் என்று சொல்லும் அளவிற்கு பணக்காரத்தனம் நிரம்பியிருந்தது அவ்விடத்தில்.
தெருகுழாய் தான் என்றாலும் பராமரிப்பு இல்லாததால் மூடியும் தண்ணீர் கீழே கொட்டிக் கொண்டிருந்தது எடுத்து சொல்வதற்கும் ஆள் இல்லை பிரச்சனையை சரி செய்வதற்கும்
எவருக்கும் நேரம் இல்லை
100 ரூபாய் விற்கும் பெட்ரோல் எடுத்துச் செல்லும் எந்த லாரியிலும் பெட்ரோல் கொட்டி நான் பார்த்ததில்லை
300 ரூபாய் விற்கும் சமையல் எண்ணெய் எடுத்துச் செல்லும் எந்த லாரியிலும் சமையல் எண்ணெய்
கொட்டி நான் பார்த்ததில்லை
தண்ணீர் கொட்டினால் கண்ணீர் சிந்த நேரிடும் பின்னால் என்பது இங்கு இருக்கும் எவருக்கும் ஏனோ புரியவில்லை அது இலவசமாகக் கிடைப்பதால்.
இந்த நிலை மாறாவிட்டால்
ஒரு நாள் வரும் –
தண்ணீர் இல்லாததால்
குடிக்க தண்ணீர் இல்லாததால்
இங்கிருந்த மனிதர்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு செத்துப் போனார்கள்
இங்கு என்ற செய்தியுடன் ஒரு நாள் வரும்.
நாம் யாருக்கு வேண்டுமானால் நல்லவனாக கெட்டவனாக இருந்து விட்டுப் போகலாம்
ஆனால் தண்ணீர் விஷயத்தில் நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக திருந்தாவிட்டால்
நம் எதிர்கால சந்ததிக்கு நாமே செத்தும் கொள்ளி வைக்கப் போகின்றோம் என்ற உண்மை மட்டும் புரிந்து தூங்க போங்கள்
நடப்பவை நல்லதுக்கு அல்ல
இது தான் நிரந்தரம் என்றால்
இது மட்டும் கடந்து போகாது
நம் எதிர்காலம் உறவுகள் செத்து தான் போக வேண்டும் வாழ்வதற்கு முன்பே..
நன்றி வணக்கம்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this: