April 26 2018 0Comment

சோமநாதர் கோவில்

 

சோமநாதர் கோவில் மயிலாடுதுறை:

 

சோமநாதர் கோவில், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் நீடூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் சுந்தரர் நாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற காவிரி வடகரைச் சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 21வது சிவத்தலமாகும்.

 

 மூலவர் : சோமநாதேஸ்வரர்

 

அம்பாள் : வேயுறு தோளியம்மை மகாலட்சுமி ஆதித்ய அபயப்ரதாம்பிகை

 

தீர்த்தம் : புஷ்கரணி செங்கழு நீரோடை பத்திரகாளி தீர்த்தம் பருதிகுண்டம் வருண தீர்த்தம் சூரிய தீர்த்தம்

 

தலவிருட்சம் : மகிழ மரம்

 

பழமை : 1000 – 2000 வருடங்களுக்கு முன்

 

தல வரலாறு :

 

ஒரு சமயம் இந்திரன் பூலோகத்திற்கு வந்தபோதுஇ காலை நேரத்தில் சிவபூஜை செய்ய விரும்பினான்.

 

 

தேவேந்திரனுக்கு இத்திருத்தலத்தில் சிவலிங்கம் ஏதும் தென்படவில்லை. எனவே காவிரி ஆற்றின் மணலில் ஒரு சிவலிங்கம் செய்து ஒரு பாடலைப் பாடி சிவபெருமானின் நடன தரிசனம் வேண்டி பிரார்த்தித்தான்.

 

அதனால் மகிழ்ந்த சிவன் இந்திர பகவானுக்கு நடன காட்சி தந்தமையால் கான நர்த்தன சங்கரா எனக் கைகூப்பி இந்திரன் ஈசனை வணங்கினார். அன்று முதல் இந்த சோமநாதப்பெருமானுக்கு கான நர்த்தன சங்கரன் என்ற பெயர் உண்டாயிற்று.

 

 

மணலிலால் ஆன இந்த லிங்கத்தில் தேவேந்திரனின் கைவிரல்கள் பதிந்து இருப்பதை இன்றும் காணலாம்.

 

 

தன்மசுதன் எனும் கொடிய அரக்கன் தன்வினைப் பயனால் நண்டாகப் பிறந்து நாரதமுனியிடம் சாப விமோச்சனம் வேண்டினார் அவரும் சோமநாதரைச் சரணடைய பணித்தார்.

 

 

நாரதமுனியின் அறிவுரைப்படி சிவதரிசனம் பெற்ற தன்மசுதன் சிவனிடம் ஐக்கியமானான். நண்டு சென்று சிவபெருமானிடம் ஐக்கியமான துளை இன்றும் சிவ லிங்கத்தில் காணப்படுகின்றது.

 

 

பத்ரகாளியம்பிகை இச்சிவனை தொழுதே கைலாயம் சென்றாள் என்பது நம்பிக்கை.

 

 

சோமநாத சுவாமி சுயம்பு மூர்த்தியாக இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் தொழுத மூர்த்தியாக இப்பூவுலகில் கைலாசமாக விளங்கும் புண்ணியத் தலத்தில் அருள்பாலிக்கிறார்.

 

 

இத்திருத்தலம் காவிரி ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. சோமநாதசுவாமி கொலுவிருக்கும் விமானம் இருதளம் எனப்படும் கீர்த்தி மிகு விமானம் ஆகும்.

 

சூரியநாராயணனே இங்கு தங்கி அப்பனாம் சோமநாதப் பெருமானையும் அம்மையாம் வேயுறு தோளியம் பாளையும் தொழுதேத்திய புகழ் மிக்க தலமிது.

 

 

இத்தலத்தில் நவகிரகங்கள் கிடையாது. ஆனால் நவகிரகங்கள் ஒன்றிணைந்து ஒரே தீர்த்தமாக ‘ஒன்பது தீர்த்தம்” என்றே போற்றப்படும் புஷ்கரணி இங்குள்ளது.

 

 

Share this:

Write a Reply or Comment

14 − fourteen =