July 09 2022 0Comment

சொல்ல மறந்த கதை

சொல்ல மறந்த கதை

ஒரு இடம் போக வேண்டும்
எந்த இடம் என்பது
முக்கியமில்லை
ஏதோ ஒரு இடம்
ஆனா நீ இருக்கனும்
கூடவே நான் இருக்கனும்

நீ
நான்
கூடி இருக்கனும்

வேறு யாரும் அங்கே
இருக்க கூடாது

குறிப்பாக மனித
வாடையே இருக்க கூடாது

நீ நான் மட்டும் தான்

ரசிக்கவோ
ருசிக்கவோ
பார்க்கவோ
ஆச்சரியப்படவோ
வாயை பொளக்கவோனு

எந்த ஒரு
ஆச்சர்யமும் இல்லாத
ஒரு இடமா இருந்தா
இன்னும் நல்லது

ஏன்னா நான்
உன்னை பார்க்கனும்
நீ என்னை பார்க்கனும்

அது சாயங்காலமா இருந்தா
இன்னும் நல்லது

மெதுவா விரலை பிடிச்சிக்க

இறுக்கமா வேணாம் மெதுவா
பிறந்த குழந்தையை எப்படி
லேசா தொடுவோம்….
அது போல..

பாரமில்லாம
பிடிச்சிக்க

அப்படியே தலையை
தோள்ல சாய்ச்சிக்க

நான் மகிழ்ச்சியா இருக்கிற
ஒரே இடம் அந்த மார்பு
தான்னு சொல்ற மாதிரி
அப்படியே சாய்ச்சிக்கிட்டு
ஏதாவது பேசு

குரலை கேட்டுக்கிட்டே இருக்கிற மாதிரி எதையாவது பேசு

சிரி
பேசு..

சிரி
பேசு..

நான் எங்கேயாவது
எதையாவது பார்த்துட்டு
உன் குரலையும் உன் சிரிப்பையும் கேட்டு உள்ளுக்குள்ளே மிதக்கனும்

போதையில் இருக்கற மாதிரி…

கால் பூமியில படாம
பறந்துட்டே இருப்பேன்
அப்போ இயல்பு நிலைக்கு
திரும்ப கூட நான் இருக்கேன்னு காட்டறதுக்கு உச்சந்தலையில
உன் உதட்டால ஒரு முத்தம்

புள்ள தூங்கும் போது அதுக்கு தொந்தரவு தராம ஒரு முத்தம் கொடுப்போமே அது போல..

அப்படி ஒரு இடம்
அப்படி ஒரு நாள்
அப்படி ஒரு ஸ்பரிசம்
அப்படி ஒரு முத்தம்
அப்படி ஒரு காதல்

எனக்கு தா…
அள்ளி பூசிக்கறேன்…..

காதலுடன்
JP

நான் மிகவும் ரசித்து படித்து மகிழ்ந்த எழுத்துக்களில் இதுவும் ஒன்று

காதலிக்கப்படாத ஆண்களும் இல்லை காதலிக்கப்படாத பெண்களும் இல்லை இந்த பூமியில் என்பதில் முழு நம்பிக்கை உள்ளவன் நான்.

இதைப் படித்தவுடன் ஏனோ
மனம் லேசானது போல இருக்கிறது
தொலைத்த காதலின் எச்சம்
மிச்சம் இருக்கும்
அத்தனை பேருக்கும்
இந்த எண்ணம் நிச்சயம் இருக்கும்

என்றோ பார்த்த ரசித்த வானவில்லை ஏனோ மீண்டும் உடனே பார்க்க முடியாதா என்கின்ற தாக்கத்தை
என்னுள் உணர்கின்றேன்
இதை படித்து முடித்தவுடன்

நீ வானவில்லாய் இரு
நான் அதில் இருக்கும்
ஏழு நிறமாய் இருப்பேன்
என்றும் இணைப்பிரியாமல்…

என்று அன்று நான்
உன் காதருகில் எனக்கு
பிடித்த கவிதை என்று
உன் காதுக்கு பின்னால்
அழகாக அலை போல
பறந்து கொண்டிருந்த
உன் பின்னந் தலைமுடியை
விலக்கி ரகசியமாக சொன்னது இன்று மின்னலாக என் மனதில்
ஒரு ஷனம் வந்து வெடித்து
விலகி சென்றதை நினைத்ததாலேயே
உடல் லேசாகி போனதை
யாரிடமாவது கத்தி சொல்ல வேண்டும் என்கிற என் ஆசையை
இப்போ நான் யாரிடம் சொல்வது????

கடந்த காதல் என்றாலும்
பெட்ரோல் விலையைப்
போல தினமும் என்னுள்
ஏறிக்கொண்டே தான் இருக்கிறது

உன் காதல் கொடுத்த
போதையில் நான் உளறியதை அன்று கேட்டவர்கள் அதனை
கவிதை என்று சொன்னதைக்
கேட்டு இன்று நினைத்தாலும்
எனக்கு சிரிப்பாக இருக்கிறது

நீ இல்லாமல் நான்
இல்லை என்று அன்று
நான் கூறியது கூட
பொய்யாக இருக்கலாம்

ஆனால் உன்னை
நினைக்காமல் நான்
இருந்ததே இல்லை
என்பதே மெய்!!!!!

எனக்கு பிடித்த,
எனக்கு பிடிக்கும் என்று
உனக்கு மட்டும் தெரிந்த
எனக்கு பிடித்ததால்

உனக்கும்

ரொம்ப, ரொம்ப பிடித்து போன
இராமர் நீல வண்ணத்துடன்
எல்லா தருணங்களிலும் நானும்
இருந்து கொண்டு…..

காதலும் கடந்து போகட்டும்

என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

four + 13 =