November 06 2021 0Comment

சொத்து சண்டை சிறகுகள் 10

சொத்து சண்டை சிறகுகள் 10

எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்த நினைக்காதீர்கள்
உணர்வுகளை மனதுக்குள் கட்டுப்படுத்தினாலே போதும்
பல பிரச்சனைகள் தானாக சரியாகும்
அல்லது
அந்த பிரச்சனைகள் வந்த வழியே காணாமல் போய்விடும்
அல்லது
பிரச்சனைகள் காரணத்துக்காக வந்தது என்பது புரிந்துவிடும்
இதைச் சொல்வதற்குக் காரணம் நிறைய பேர் என்னிடம் சொத்து பிரச்சனைகளை முன் வைக்கின்றார்கள்.
கடவுளுக்கும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கும் எனக்கும் உங்களுக்கும் நன்கு தெரியும்
ஒரு பக்க எதிர்பார்ப்பு சரி இன்னொரு பக்க எதிர்பார்ப்பு தவறு என்று பேராசைக்காரன் பெரும் நஷ்டத்தை தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டும் என்பதுதான் விதி உண்மையிலே பேராசைக்காரர்களுக்கு நிறைய வாய்ப்புகளை அவர்களை திருத்திக் கொள்வதற்கு கடவுள் கொடுத்தாலும் ஏனோ அவர்கள் திருந்த மறுத்து/மறந்து எப்போதுமே இறைவனுக்கு எதிராக உண்மைக்கு மாறாக தவறான பக்கமே நிற்கின்றார்கள் அந்தவகையில் பேராசைகாரனுக்கு எத்தனை சொத்துக்கள் இருந்தாலும் கூட பிறந்தவர் என்று கூட பாராமல் தன்னுடைய ரத்தம் தன்னுடைய உறவு
என்றுகூட நினைத்து பார்க்காமல் சொத்துக்காக பொய்யையும் புரட்டையும் கையில் எடுக்கும் ஒவ்வொரு பேராசைக்கார முட்டாளுக்கும் பல தருணங்களில் அவன் வாழும் காலத்திலேயேயும் சில தருணங்களில் அவன் வாழும் போது இல்லாமல் போனாலும் அவன் சார்பாக இந்த பூமியில் வாழும் அவன் சந்ததி அனைவருக்கும் ஒரு நாள் கடவுள் புரிய வைப்பார்
நடுத்தெருவிற்கு செல்ல தகுதியான குடும்பம் சொத்துக்காக ஆசைப்பட்ட பேராசைக்காரனின் குடும்பம் என்று..
நடுத்தெருவிற்கு தான் இவ்வளவு சண்டை என்ற உண்மை உங்களுக்கு உரைத்து புரிந்துவிட்டால் கொஞ்சம் யோசித்து செயல்படுங்கள் –
நீங்கள் கடவுளை முழுமையாக நம்புகின்ற பட்சத்தில்.
அதனால் தான் திரும்பவும் சொல்கிறேன்
எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்த நினைக்காதீர்கள்
உணர்வுகளை மனதுக்குள் கட்டுப்படுத்தினாலே போதும்
பல பிரச்சனைகள் தானாக சரியாகும்
அல்லது
அந்த பிரச்சனைகள் வந்த வழியே காணாமல் போய்விடும்
அல்லது
பிரச்சனைகள் காரணத்துக்காக வந்தது என்பது புரிந்துவிடும்
நீங்கள் வாழும் காலத்திலே உங்களுக்கு ஏதோ ஒரு வகையிலே கடவுள் நல்லதை செய்து இருக்கின்றார் என்கின்ற உண்மை நிச்சயம்
புலப்படும் புரியவரும்
கடவுளை நம்புங்கள்
அவர் புலப்படும் வரை….
அவரை முழுமையாக
உணரும் வரை…
பொழுதும் விடியும்
நிச்சயமாக பூவும் மலரும்
என்றும் அன்புடன்
Drஆண்டாள் P சொக்கலிங்கம்
May be a closeup of 1 person, body of water, tree and sky
Share this:

Write a Reply or Comment

two × 4 =