சொக்கனின் மீனாட்சி
இன்று (27:07:2022) காலை என்னுடைய மிக மிக நெருக்கமான நண்பர் ஒருவரை சந்திக்க அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன்
முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமான சந்திப்பு என்பதால் சுருக்கமாக பேசி முடித்துவிட்டு உடனே கோவில்பட்டி நோக்கி சென்றுவிட எத்தனித்த போது என் நண்பர் அண்ணே இன்னைக்கு புதன்கிழமை நான் எப்போதும் வழக்கமாக மீனாட்சி அம்மனை பார்த்துவிட்டு தான் என் வேலைக்கு போவேன் அதனால் நீங்களும் 20 நிமிஷம் மட்டும் ஒதுக்கி என் கூட வாருங்கள் என்றபோது போகலாமா வேண்டாமா என்ற இரட்டை மனசுடன் பதில் சொல்ல தயங்கிய உடனே என்னை நன்கு அறிந்த என் நண்பர் அண்ணே நீங்க எல்லாம் எங்க மீனாட்சியை பார்க்க மாட்டீங்க என்று சொன்னவுடனே அதெல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா சரி நானும் வருகிறேன் என்று கூறிவிட்டு நான் என் நண்பர் மற்றும் அவருடைய போலீஸ் பாதுகாவலருடன் நேராக மீனாட்சி அம்மன் சன்னதியில் வாசலில் உட்கார்ந்து அம்பாளை தரிசனம் செய்து கொண்டிருந்தோம்
என்னை அழைத்து சென்றவர் மதுரையில் மிக முக்கியமானவர் என்பதாலோ என்னவோ நிறைய நேரம் உட்கார்ந்து அன்னையின் காலடியில் அன்னையை தரிசிக்க வாய்ப்பு கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருதுகின்றேன்
எனக்கு பொதுவாக கடவுளிடம் வேண்டக்கூடிய பழக்கம் இல்லை மாறாக அதை சற்று திருத்தி நன்றி சொல்லக்கூடிய வாய்ப்பாக தான் இது நாள் வரை எல்லா கோவிலுக்கும் சென்று நடந்து கொண்டு இருக்கின்றேன்(ஓரிரு முறை நீங்கலாக)
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இன்று திடீரென்று தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்ததால் இன்று நான் அன்னை மீனாட்சியை பார்க்கும் போது எந்தவித எண்ணமும் அந்த சன்னதியில் அவள் முன் உட்கார்ந்த போது உடனே வரவில்லை.
சில நிமிடங்கள் கழிந்த பிறகு திடீரென்று மதுரையை பூர்வீகமாக கொண்ட கேப்டன் திரு விஜயகாந்த் பற்றிய எண்ணம் வந்து சென்றது
அவ்விடத்தில்
அவர் பற்றிய எண்ணம் ஏன் எனக்கு வந்தது எதற்கு வந்தது என்று என்னால் நிச்சயமாக உங்களுக்கு உகந்த காரணங்களை சொல்ல முடியாது
இருந்தாலும் அந்த எண்ணம் வந்த உடனே திடீரென்று ஒரு இழை கிடைத்தது
அது:
கேப்டன் திரு விஜயகாந்த் அவர்கள் தான் நான் இன்று அன்னதானம் என்கிற விஷயத்தை பெரிய அளவில் எடுத்துச் செல்வதற்கு முழு முதற் காரணம்
அவருடைய வழிகாட்டுதலால் நான் இன்று சில நூறு பேருக்கு தினமும் உணவளிக்கக்கூடிய வகையில் வளர்ந்திருக்கின்றேன்
அதற்கு நன்றி தாயே
பசி இல்லாத பூமியை உருவாக்கு தாயே
அந்த நிலை வரும் வரை ஆயிரக்கணக்கான ஊருக்கு தினமும் உணவு அளிக்கும் வகையில் என்னை வாழ வைப்பாய் என்பது எனக்கு தெரியும் அதற்கு நன்றி
என்று அன்னை மீனாட்சிக்கு நன்றி கூறிக் கொண்டிருந்தபோது
இடது பக்கம் நான் உட்கார்ந்த இடத்தை நோக்கி ஒரு பெண்மணி நடந்து வந்து கொண்டிருந்தார் தெரிந்த உருவமாக மனசு புரிந்து கொண்டதை மூளை புரிந்து கொள்வதற்கு ஷன நேரம் ஆன போதிலும் சுதாரித்துக் கொண்டு என்னை அறியாமலேயே
புன்னகைத்தேன்
வந்த பெண்ணும் சொக்கு சௌக்கியமா?!!
என்று கேட்டுவிட்டு கூட வந்த இரண்டு நபர்களிடமும் திரும்பி பார்த்து நம்ம சொக்கு என்ற போது அந்த இருவரும் மிகப்பெரிய அளவில் முகம் மலர்ந்தார்கள்
அங்கு வந்த பெண் திருமதி பிரேமலதா விஜயகாந்த்
உடன் வந்தவர்கள் தேமுதிகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் மதுரை திரு பாலன் மற்றும்
தேமுதிக தலைமை நிலைய செயலாளர் & முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு பார்த்தசாரதி அவர்கள்
ஆச்சரியப்பட்டு போனேன்
அன்னை மீனாட்சியை நினைத்து…
அதிர்ந்து போனேன்
அன்னை மீனாட்சியின்
அதிரடி ஆட்டத்தை பார்த்து
அசந்து போனேன்
அன்னை மீனாட்சியின்
அட்டகாச விஸ்வரூபத்தை பார்த்து
சாமி கும்பிட்ட பிறகு
திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடன் சில நிமிடங்கள் பேசிவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தோம்
நீண்ட வரிசை அன்னை மீனாட்சியின் அமர்க்கள புன்னகையை ரசிக்க காத்துக் கொண்டிருந்தது
திடீரென்று ஒரு குரல் அந்த வரிசையில் இருந்து அண்ணாணாணா என்று…
யார் என்று பார்த்தால் பெருந்துறை காஞ்சிகோயில் சேர்ந்த என் அன்பு சகோதரி சுமதி அவர்கள்
அவரும் கையைப் பிடித்துக் கொண்டு
அண்ணா மீனாட்சியை நீங்கள் ஆடி மாதத்தில் பார்க்க வேண்டும் என்று சொன்னதால் இன்று பார்க்க வந்தேன்
வரும்போதே அண்ணா இங்கு இருப்பார் என்று என் கூட இருக்கும் என் நாத்தனார் அமுதாவிடம் சொல்லி கொண்டே வந்தேன்
மீனாட்சி உங்களை பார்க்க
வைத்து விட்டாள் சூப்பர் அண்ணா
என்று கூறிய பொழுது உடம்பு
வெல வெலத்து போய்விட்டது
வெவ்வேறு இடங்களில் இருந்து வெவ்வேறு காரணங்களுக்காக பயணப்பட்டவர்கள் எந்த வித முன்னேற்பாடும் இன்றி ஒரே இடத்தில் சந்திக்க நேரிட்டதற்கு
காரணம் அன்னை மீனாட்சி இன்றி வேறு என்ன இருக்க முடியும்
நினைத்த உடனே நடத்திக் கொடுப்பவள் அன்னை மீனாட்சி என்பதற்கு இதைவிட பெரிய சாட்சியம் தேவையில்லை
கவனம் இருக்கட்டும்
நினைப்பதையும் நடத்திக் கொடுப்பாள் அன்னை மீனாட்சி
நடக்க வேண்டியதையும் நினைக்க வைப்பாள் அன்னை மீனாட்சி
அன்னை மீனாட்சி சரணடையுங்கள்
ஆடி மாதத்தில் அவள் அருள் பெறுங்கள்
வாழ்க வளமுடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்