January 22 2018 0Comment

சுருட்டப்பள்ளி சிவபெருமான்:

காக்கும் கடவுள் கருணா மூர்த்தியான விஷ்ணு பல இடங்களில் பள்ளிகொண்ட கோலமாக காட்சி அளித்து பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதை பார்த்திருப்பீர்கள்!

ஆனால் ஈசன் பள்ளிக்கொண்ட நிலையில் எந்த இடத்திலும் அருள்பாலிப்பதை கண்டிருக்க முடியாது.ஆனால் சிவன் பள்ளிகொண்டிருக்கிறார்.

பள்ளிகொண்ட சிவனை காணும் முன் சிவன் எதற்கு பள்ளி கொண்டார் என்று பார்க்கலாம்.தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமுதத்தை பெறமுயற்சித்தனர்.அப்போது வாசுகியை கயிறாகவும் மந்தார மலையை மத்தாகவும் பயன்படுத்தினர்.வலி தாங்க முடியாத வாசுகி விஷத்தை கக்க ஆலகால விஷம் பரவியது.

தேவர்களும் அந்த விஷத்தின் வெப்பம் கொடுமை தாள முடியாமல் தவித்து சிவனை சரணடைந்தனர்.அப்போது சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி விஷத்தை திரட்டி எடுத்து வரச்சொன்னார்.அவரும் விஷத்தை ஒரு நாவற்பழ வடிவில் திரட்டி எடுத்து வந்தார்.

அதை சிவன் முழுங்க உடன் இருந்த பார்வதி என்ன காரியம் செய்து விட்டீர்கள் என்று விஷம் உள்ளேஇறங்காமல் இருக்க கழுத்தினை பிடித்தாள்.விஷம் நெஞ்சோடு நின்றது.சிவன் திருநீலகண்டன் ஆனார்.இந்த நிகழ்வே பிரதோஷ கதையாக சொல்லப்படுகிறது.

விஷம் பரவிய சமயம் பிரதோஷ காலம் தேவர்கள் இங்கும் அங்கும் ஓடினர்.அதை நினைவு படுத்தவே சோமசூக்த பிரதட்சணம் பிரதோஷ காலத்தில் செய்யப்படுகிறது.இப்படி விஷம் உண்ட சிவன் நந்தி மீது நர்த்தனம் புரிந்தார்.பின்னர் பார்வதியுடன் கைலாயம் செல்லும் வழியில் பார்வதியுடன் இந்த தலத்தில் தங்கி ஓய்வெடுத்ததாக கூறப்படுகிறது.

பார்வதியின் மடியில் தலைவைத்து படுத்திருக்கும் கோலத்தில் சிவன் சுதை சிற்பமாகஉள்ளார்.எல்லா ஆலயங்களிலும் சிவன் லிங்க வடிவில் காணப்படுவார்.இங்கு தம்பதி சமேதராக சுய ரூபத்துடன் இருப்பது இன்னொரு சிறப்பு.மேலும் இந்த ஆலயத்தில் அனைத்துதெய்வங்களும் தம்பதியராக இருப்பதும் ஒரு சிறப்பு.

பிரதோஷம் உருவான தலம் என்றும் முதல் முதலில் பிரதோஷ வழிபாடு இங்குதான் தோன்றியது என்றும் சொல்லப்படுகிறது.

சுருட்டப்பள்ளி என்னும் இந்த தலம் சென்னையில் இருந்து 56 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பதி செல்லும் வழியில் அமைந்துள்ளது.ஆந்திர எல்லையோரம் அமைந்துள்ளது.

இந்த தலத்தில் இறைவன் பள்ளிகொண்டீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.இறைவி அமுதாம்பிகை என்று வழங்கப்படுகிறார்.

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த தலம் ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.எல்லா பிரதோஷமும் விஷேசமாக கொண்டாடப்பட்டாலும் சனிப்பிரதோஷம் ஒரு திருவிழா போல மிக விமரிசையுடன் கொண்டாடப்படுகிறது

இந்த தலத்தில் வால்மீகி முனிவருக்கு சிவன் காட்சி கொடுத்தார்.இதன் காரணமாக வால்மீகிஸ்வரர் இங்கு எழுந்தருளி உள்ளார்.மூலவரை வால்மீகிஸ்வரர் என்கிறார்கள்.
இவருக்கு எதிரில் ராமலிங்கம் உள்ளது.இந்த சன்னதிக்கு வெளியே துவார பாலகருக்கு பதில் சங்கநிதியும், பதுமநிதியும் உள்ளனர்.அம்மன் மரகதாம்பிகை சன்னதிக்கு வெளியில் துவார பாலகியருக்கு பதில் பாற்கடலிலிருந்து கிடைத்த காமதேனுவும், கற்பகவிருட்சமும் உள்ளது.
அதிசயமாக பரமன் பள்ளி கொண்டது தெரிய வந்ததும் இத்திருக்கோலத்தைக் கண்டு மகிழ தேவர்கள் அனைவரும் சுருட்டப்பள்ளிக்கு விரைந்து வந்துவிட்டார்கள்.தன்னை நாடி வந்தோருக்காக சிவபெருமான் அந்த மாலை நேரத்தில் ஆனந்த நடனம் ஆடிக்காட்டினார்.
தேவர்கள் அவரை தரிசித்து மகிழ்ந்தார்கள் என்கிறது இத்திருகோவில் ஸ்தல புராணம்.

Share this:

Write a Reply or Comment

5 × three =